நடந்த இனப்படுகொலையால் மனமுடைந்துபோயிருந்த நேரம். 7 கோடி ஜனங்களாக இல்லாமல் 7 கோடி ஜடங்களாகக் கிடந்த நமது கோழைத்தனமும் மௌனமும்தான் ஒன்றரை லட்சம் பேரைக் கொன்றது – என்கிற யதார்த்தம் உணர்ந்து இதயம் கூனிக் குறுகிப் போயிருந்த நேரம். அப்போதுதான் அந்தக் குறுஞ்செய்தி வந்தது. அதைப் படித்தவுடனேயே நொறுங்கிப்போனது இதயம்.
‘கொல்லப்பட்டுப் புதைக்கப்படும்
கடைசி ஈழத்தமிழனின்
கல்லறையில் எழுதுங்கள்…..
எங்களைக் கொன்றது
எங்களது தாய்மொழி!’
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி