Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-1


நாம் ஒன்றும் ஆயுதத்தின் அழகை ரசித்தவர்கள் அல்ல.
1948ல் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் சிதைக்கபட்டவர்கள்.

எம் நலனை தீர்மானிக்கும் தேர்தலில் ஒதுக்கபட்டோம்,உயர்கல்வி மறுக்கபட்டோம்,வேலைவாய்ப்பு அற்றவர் ஆக்கபட்டோம்.

எமது கல்விதலம் அழிக்கபட்டது.

விளைந்திருக்கும் நெல் அறுவடை செய்யும் நாள் ஆயுதபடைகளுடன் வந்து சூறையாடினார்கள்,இவையெல்லாம் காந்திய வழியே கடவுள் தந்த வழியென நாம் இருந்த நாட்களே ஆரம்பித்துவிட்டன.
எம் தேசம் அழகானது,அன்பானது,அறிவை ஆராதித்தது.

நாம் ஒன்றும் பிணம் நிறைந்த தேசத்தை யாசித்தவர்கள் அல்ல.

எம் வீடுகளிலும் மழழையின் அழகு ரசிக்கபட்டது.

எம் வயல் வெளியும் பச்சைபசேலென்றெ இருந்தது.

எம் பல்கலைகழகம் நிறைந்தே வழிந்தது மாணவர்களால்

.எம்பெண்களின் நாணமெனும் அணிகலனால் தேசம் அழகாய் சிவந்தே இருந்தது.
 அடுத்தபக்கம்

Leave a comment

Information

This entry was posted on March 29, 2011 by in தாயகம் and tagged .
March 2011
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி