ஆரம்ப திகதிக்கும் இறுதி திகதிக்கும்
இடையில் ஓடிக்கொண்டிருக்கிறேன்
எந்தபுள்ளியில் நிக்கிறேன்
எதுவாய் நிக்கிறேன்
கறுப்பா
நீலமா
நான் எதிலே
என் மெய் எதிலே.
அள்ளியெறிய உள்ளம் நிறையஉள்ளது அன்பு,அதை திருப்பிதரத்தான்
யாரும் உள்ளனரா………………
சாதிக்கொரு நீதி
ஊருக்கொரு நீதி,அவர் அவருக்கொரு நீதி,எனக்கென்று எதனையும் விட்டுவைத்தனறோ
A.Kயும் P.Kயும் தூக்கினோர் அவர்
அவருக்கொள்ளோ தெரியும் அன்பும்
அதில் காணும் இன்பமும்.
நாமோ கொடுக்கும் ஒரு ரோஜாவில்
அன்பு என்று எதையோ
காட்டி திருப்திகொள்கிறோம்.
செல்லடியும் பட்டோம் சொல்லடியும்
அல்லவோ பட்டோம்,
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி