நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-2
எல்லாமே நன்றாகவே இருந்தது.வரிக்கு வரி அழகாய் அமைந்த வீடுகள்,நேர்த்தியான வீதிகள்,தெருவுக்கு தெரு -வீட்டுக்கு வீடு நிறைந்திருந்த நெடுமரங்கள் பூஞ்சோலைகள்.வீடு தேடிவருபவர்கள் சிங்களவராக இருந்தாலும் வாசல் ஓவென்றே திறந்து இருந்தது,இருத்தி வைத்து மனம் குளிர விருந்து வைத்தது.ஆனால்,இட்லி,வடை,தோசை என பெயரிட்டு அழைத்து தேடி … Continue reading
நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-1
நாம் ஒன்றும் ஆயுதத்தின் அழகை ரசித்தவர்கள் அல்ல. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் சிதைக்கபட்டவர்கள். எம் நலனை தீர்மானிக்கும் தேர்தலில் ஒதுக்கபட்டோம்,உயர்கல்வி மறுக்கபட்டோம்,வேலைவாய்ப்பு அற்றவர் ஆக்கபட்டோம். எமது கல்விதலம் அழிக்கபட்டது. விளைந்திருக்கும் நெல் அறுவடை செய்யும் நாள் ஆயுதபடைகளுடன் … Continue reading
உன்னோடு ஓர் நிமிடம்
உனக்கு புரியுமா உனக்கான தெரிவுகளில் நானும் ஒருவன் என்பதற்கும் அப்பாற்பட்டவன் நான். ”நீ ஒன்று தர நான் ஒன்று தர”என தரப்படும் பொருள்களுக்கூடாக தான் நான் எனை புரியவைக்கவெண்டும் என்றால்!மன்னித்துக்கொள்,நீ என்னை மறந்துவிடு. ஆனால்! எச்சரிக்கிறேன் எனது ஆத்மாவின் அருகாமை-உனை … Continue reading
ஒரு நாள் மட்டும் சிரிக்க,ஏன் படைத்தான்!
பசும்புல்லும் பால்நிலவும்,பரிசுத்தமான உன் நினைவுகளும் பக்கத்தே உன் சுவாசமும் இருந்துவிட்டால்………………… தமிழகமே! உன்னால் மட்டுமே ஈழம் வாழும் யாரைக்கேட்டு பிறந்தோம்,யாருக்காக பிறந்தோம் பாவப்பட்ட மனிதர்களிடையே உன்னிடம் மட்டுமே மன்றாடமுடியும் அவர்களால் முடியாதது ,உன்னால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை நாட்கள் தான் … Continue reading
அண்ணன் நின்ற திசைநோக்கி நடந்தவர்கள்
எல்லாம் முடிந்து போகும் என்று தெரிந்தும் கூடவே நின்றீர்கள்,வீழும் எறிகணை மழைக்குள்ளும் கூடவே நின்றீர்கள். 8கோடி தமிழரின் படையாய் 30 ஆயிரம் வீரர்கள் வீரம்செறிந்து வெடித்து வெடித்து போரிட , எட்டுதிக்கிலும் உலகின் எல்லா படைபலமும் திரட்டட பட்டு அவர்க்கெதிராய் போர் … Continue reading
இன்னும் எரிந்துவிடவில்லை
மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்,நானும் இன்னும் எரிந்து விடவில்லை. உனக்கும் கோபமாகதான் இருக்கும்.
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி
நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி. தன் வாழ் நாள் எல்லாம் எமையே எண்ணிக்கொண்டு, எமக்காகவே சுவாசித்துக்கொண்டு தன் வாழ்வின் வசந்தம் எல்லாம் எமக்காகவே துறந்தாளே!! அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன என் தாய்க்கு முன்னால்.
உந்தன் முகவரி எனக்கு தெரியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்……. இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்! தவம் போல் இருந்து யோசிக்கிறேன்……. அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்! கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை……! புல்லாங்குழலே … Continue reading
வசந்தமெனும் உன் வாழ்வு
நீ பிறவி எடுத்து வாழ்வதற்கும்,உனது உயிர் இருப்பிற்கும் உள்ளார்ந்த படைப்பியல் காரணம் ஒன்று இருக்கின்றது.உனது படைப்பு நன்மை பயப்பது! நல்லவனாக வாழ்வதற்குத்தான் நீ படைக்கபட்டிருக்கிறாய்.நீ இப்பொழுதும் நல்லவனாகதான் வாழ்கிறாய்,உடன் பிறந்த தீய இயல்புகள் ஒன்றுமே உனக்குள் இல்லை.ஏதோ ஒரு காரணத்திற்காகவே நீ … Continue reading
இது கனவல்ல-எனக்கான வேதங்கள் ஓர் காலம்-I
இதுவும் ஒர் சிறுகதையே. 16.08.96 வவுனியா அன்பின் தம்பி அறிவது நலம்,நாடுவதும் அஃதே.நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து விட்டோம்.தனிய இருக்க விசரா இருக்கிறது.நாள் முழுக்க அறைக்குள் இருந்து எனக்கு விசர் பிடிக்க போகிறது.வவுனியாவில் ஓரிடமும் தெரியாது,போகவும் பிடிக்கவில்லை.துணுக்காய் போக விருப்பமாக இருக்கிறது.அங்கு … Continue reading
மரணித்தவர்கள்
பாழுங்கல்லறைகளில், விடிவே இல்லாத வானத்தின் சூரியர்களாக பொதுவுடமைவாதிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கும் எமை மானிடமே மறவாதிரு. கேள்விப்பட்டோம் மாவீரர்நாள் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று செய்யபோகின்றீர்களாமே!! நன்று, நன்று.இப்படிகூட நடக்காவிட்டால் நாம் எவ்வாறு எமை மனிதர்கள் என்று அழைத்துகொள்வது,இல்லையா சகோதரர்களே. வெடி ஏந்தி உடல் … Continue reading
கனவுகளா இவை
வீடுதான் எனக்கு எல்லாமே, வெறும் கற்சுவர்களை கொண்டதல்ல எனது வீடு எனது வீட்டில் பூக்கள் பூப்பதில்லை உயிர்த்திருப்பதுண்டு,நான் வீடு திரும்பும் போது ஆவலாய் எனக்காக காத்திருக்கும் .அவைகளுக்கு எனை கடிந்து கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை,இன்முகத்துடன் தோள் தழுவி எனை வரவேற்கும். … Continue reading
நடந்து வந்த பாதைகள்
இதுவும் ஓர் சிறுகதையே. Think of me when your goals seem more distant than ever For I am always behind you, cherishing your dreams as my own..appreciating your struggle to win … Continue reading
விண்மீன் என உன் முகம் பார்க்கும் நீர்மீன்கள்
உடைந்திட்ட குடை நழுவிடும் உடை. வழிந்தோடும் நீரோடை தயங்கிடும். முகிலுடன் முட்டிக்கொள்ளூம் ஏங்கிடும் கதிர்கள். உன் காலின் கீழ் கர்வம் கொள்ளும் கற்கள். ஒருசில நிமிடமெனினும் மரித்தெழுந்திருப்பான் , பாவம் அந்த புகைப்படக்காரன் .
சொட்டும் ஈரமில்லையோ
உன்னிடம் வரக்காத்திருக்கும் குழந்தைகள் நாம் தாயே,உன் மடிதொடகாத்து காத்து காய்கிறோம்.இரத்தம் சொட்ட சொட்ட உன்னை பிரிந்து ஓடினோம்,திரும்பி பார்த்து கதறுகிறோம் .உன்னை குத்தி குதறும் பதர்களிடையே உன்னை விட்டு வந்தோம்,தாயே உன் குழந்தைகளுக்கு நீ அன்பைதான் போதித்தாய் ..கத்தி தூக்க கற்று … Continue reading
பிரபாகரன் எனக்கு தொடுவானம்
தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும் : நடிகர் பிரகாஷ்ராஜின் அருமையான ஒரு வரலாற்று பதிவு. `என் தேசத்துமண்ணே! உனக்கு என் ரத்தத்தை தருவேன். இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்…` அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். … Continue reading