Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

பாசக்கார பசங்கள்

ஈனமாய் நசிந்து கிடக்கும் ஈழதமிழன் கழுத்தில் சிங்களத்து சிப்பாய் கால்கள் அவலங்கள் நிறைந்த பூமியில் சுடலைக்குருவிகளின் ஒப்பாரிகள் MUSKOKA கதிரைகளில் கிடந்து CUBAN சுருட்டு புகைக்கும் பெருமனிதருக்கு எல்லாமே COLLATERAL DAMAGE ஈழத்தவனுக்கு ஒரே நிம்மதி பாசக்கார பசங்க நீங்கதான்யா

August 7, 2011 · Leave a comment

மனிதம் போர்த்திய மிருகங்கள்

இன்னும் என்ன வேண்டும்!எதற்காக இந்த காத்திருப்பு! தமிழீழம் அற்ற பூமியில் தமிழரின் நிலை என்ன என்று,தயக்கமே இன்றி ,விரித்துகாட்டுது சிங்களம். எதற்காக எந்த காத்திருப்பு! உலகவல்லரசு நாடுகளின் வீதியில் நின்று,தயக்கமே இன்றி எக்காளமிடுகிறது குட்டிதீவின் சேனாதிபதி.

July 27, 2011 · Leave a comment

புரிய நியாயமில்லை

தண்ணீராய் ஊற்றுது செந்நீரை ஒன்று குட்டி செடியொன்று சொல்லுது இலைமேல் நீராய் இரு முட்டாளே என்று. மரம் சிரிப்பது கிளிக்கு தெரிய நியாமில்லை பழத்தை சுவைத்தபடியே சொல்லுது ‘பூ,காய்,பழம் என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுமரமாய் நிற்கின்றியே மரமே’என்று

June 7, 2011 · Leave a comment

வீணாய்ப்போகுமோ

மெழுகாய் உருகுது தீபமொன்று இருட்டு ஏனோ முறைக்குது

June 6, 2011 · Leave a comment

கட்டுநாயக்கா-இரரணுவத்தால் சிங்களவர் தாக்கப்பட்டார்

நான் தீட்டியவாள் என் இரைப்பையிலா! relax ,sitback and enjoy பாலூட்டி வளர்த்த கிளி,பாம்பாக கொத்துதம்மா. தூரத்தே ஒரு சிங்களவனின் குரல் கேட்கிறது,என்னென்று- விடுகதையா இந்த வாழ்க்கை!விடைதருவார் யாரொ…ஓ. கொலைகளும் குற்றங்களும் செய்து பழக்கப்பட்ட இராணுவம் ஒன்று கட்டுப்பட்டு என்றுமே இருக்காது.தமிழர் … Continue reading

June 2, 2011 · Leave a comment

என்று விடுதலையாவேன்….. …. … .. .

யூதர்களின் இன்னும் ஓர் passover தினம் வழமைபோல் இவ்வருடமும் இங்கே,அடிமை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டிய நாள்.3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியரிடம் இருந்து விடுதலையானதை தாளாத மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்னுமொரு நாள்.சூழ்ந்திருந்த முள் வளையமெல்லாம் அறுத்துக்கொண்டு வெளியோடிய நாள், தமெக்கென ஓர் … Continue reading

April 21, 2011 · Leave a comment

நாம் தமிழர்

தமிழகத்தில் தவிர்கமுடியாத ஓர் காலத்தின் பிரசவம். ஆயுதம் கொண்டு பேசப்பிரியப்பட்டவர் அல்ல ஈழத்தமிழர்,ஆயுதம் தூக்க திணிக்கபட்டவர். இனி ஆயுதம் வேண்டாம் ,எம் அறிவின் அழிவித்திறம் காட்டுவோம் அவர்க்கு. உனக்கு வலி தர எம் இருப்பில்லை,நீ தருவதின் பெறுமானம் உனக்கு தெரியவேண்டாமா.

April 1, 2011 · Leave a comment

நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-2

எல்லாமே நன்றாகவே இருந்தது.வரிக்கு வரி அழகாய் அமைந்த வீடுகள்,நேர்த்தியான வீதிகள்,தெருவுக்கு தெரு -வீட்டுக்கு வீடு நிறைந்திருந்த நெடுமரங்கள் பூஞ்சோலைகள்.வீடு தேடிவருபவர்கள் சிங்களவராக இருந்தாலும் வாசல் ஓவென்றே திறந்து இருந்தது,இருத்தி வைத்து மனம் குளிர விருந்து வைத்தது.ஆனால்,இட்லி,வடை,தோசை என பெயரிட்டு அழைத்து தேடி … Continue reading

March 30, 2011 · 1 Comment

நாம் நடக்க ஆரம்பித்து நீண்ட நாட்கள்-1

நாம் ஒன்றும் ஆயுதத்தின் அழகை ரசித்தவர்கள் அல்ல. 1948ல் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதலாய் சிதைக்கபட்டவர்கள். எம் நலனை தீர்மானிக்கும் தேர்தலில் ஒதுக்கபட்டோம்,உயர்கல்வி மறுக்கபட்டோம்,வேலைவாய்ப்பு அற்றவர் ஆக்கபட்டோம். எமது கல்விதலம் அழிக்கபட்டது. விளைந்திருக்கும் நெல் அறுவடை செய்யும் நாள் ஆயுதபடைகளுடன் … Continue reading

March 29, 2011 · Leave a comment

உன்னோடு ஓர் நிமிடம்

  உனக்கு புரியுமா உனக்கான தெரிவுகளில் நானும் ஒருவன் என்பதற்கும் அப்பாற்பட்டவன் நான். ”நீ ஒன்று தர நான் ஒன்று தர”என தரப்படும் பொருள்களுக்கூடாக தான் நான் எனை புரியவைக்கவெண்டும் என்றால்!மன்னித்துக்கொள்,நீ என்னை மறந்துவிடு. ஆனால்! எச்சரிக்கிறேன் எனது ஆத்மாவின் அருகாமை-உனை … Continue reading

March 28, 2011 · 1 Comment

ஒரு நாள் மட்டும் சிரிக்க,ஏன் படைத்தான்!

பசும்புல்லும் பால்நிலவும்,பரிசுத்தமான உன் நினைவுகளும் பக்கத்தே உன் சுவாசமும் இருந்துவிட்டால்………………… தமிழகமே! உன்னால் மட்டுமே ஈழம் வாழும் யாரைக்கேட்டு பிறந்தோம்,யாருக்காக பிறந்தோம் பாவப்பட்ட மனிதர்களிடையே உன்னிடம் மட்டுமே மன்றாடமுடியும் அவர்களால் முடியாதது ,உன்னால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை நாட்கள் தான் … Continue reading

March 27, 2011 · 1 Comment

அண்ணன் நின்ற திசைநோக்கி நடந்தவர்கள்

எல்லாம் முடிந்து போகும் என்று தெரிந்தும் கூடவே நின்றீர்கள்,வீழும் எறிகணை மழைக்குள்ளும் கூடவே நின்றீர்கள். 8கோடி தமிழரின் படையாய் 30 ஆயிரம் வீரர்கள் வீரம்செறிந்து வெடித்து வெடித்து போரிட , எட்டுதிக்கிலும்  உலகின் எல்லா படைபலமும் திரட்டட பட்டு அவர்க்கெதிராய் போர் … Continue reading

March 25, 2011 · Leave a comment

இன்னும் எரிந்துவிடவில்லை

மீண்டும் மீண்டும் அடிக்கிறாய்,நானும் இன்னும் எரிந்து விடவில்லை. உனக்கும் கோபமாகதான் இருக்கும்.

March 25, 2011 · Leave a comment

நானும் மருகித்தான் போகிறேன்,அவளை எண்ணி

நானும் மருகித்தான் போகிறேன்,அவளை  எண்ணி. தன் வாழ் நாள் எல்லாம் எமையே எண்ணிக்கொண்டு, எமக்காகவே சுவாசித்துக்கொண்டு தன் வாழ்வின் வசந்தம் எல்லாம் எமக்காகவே துறந்தாளே!! அண்டசராசரம் எல்லாம் சிறுத்துவிட்டன  என் தாய்க்கு முன்னால்.

March 23, 2011 · Leave a comment

சீனாவின் F-7 விமானபிரிவு ஈழமண்ணில் அழிப்புநடவடிக்கையில்,இணையத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு

The Independent,பத்திரிக்கையில் வரையப்பட்ட கட்டுரையில் ”சீனாவின் F-7 விமானம் தமிழினத்திற்கு எதிரானவர்களிற்கு துணைபோனது” என்ற வரி மட்டும் ஓர் தமிழ் இணையத்தின் கண்ணில் பட்ட அற்புதம். இக்கட்டுரையில் எத்தனையோ தடவைகள் தேசியதலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களை மிகவும் கீழ்த்தரமாக குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்,அவை இந்த இணையத்தின் கண்ணில் … Continue reading

March 23, 2011 · Leave a comment

உந்தன் முகவரி எனக்கு தெரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்……. இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்! தவம் போல் இருந்து யோசிக்கிறேன்……. அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்! கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை அவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை……! புல்லாங்குழலே … Continue reading

March 22, 2011 · 1 Comment

வசந்தமெனும் உன் வாழ்வு

நீ பிறவி எடுத்து வாழ்வதற்கும்,உனது உயிர் இருப்பிற்கும் உள்ளார்ந்த படைப்பியல் காரணம் ஒன்று இருக்கின்றது.உனது படைப்பு நன்மை பயப்பது! நல்லவனாக வாழ்வதற்குத்தான் நீ படைக்கபட்டிருக்கிறாய்.நீ இப்பொழுதும் நல்லவனாகதான் வாழ்கிறாய்,உடன் பிறந்த தீய இயல்புகள் ஒன்றுமே உனக்குள் இல்லை.ஏதோ ஒரு காரணத்திற்காகவே நீ … Continue reading

March 20, 2011 · Leave a comment

அழியும் நிலைவருமெனில் அழிவார்களேயன்றி வளையார்கள்

script>

March 19, 2011 · Leave a comment

மானிடம் உயர்ந்ததா-நாம் யார்

எமக்காகவே எல்லாம் என்ற சிந்தனை எவ்வாறு எம்மிடம் வந்தது.இருப்பவை எல்லாம் இருப்புக்கான அர்த்தத்துடன் அழகாய் அமைந்திருக்கின்றன,அப்படியே இருந்தும் கொள்கின்றன.நாம் மட்டும்,இருப்பவை எல்லாவற்றினதும் இயல்புகளை எமக்கேற்றபடி மாற்றிக்கொள்கிறோம் அழித்தும்கொள்கிறோம்.ஏன்!மனிதர்களாகயால்,எமக்கு எல்லாவற்றிலும் இருக்கும் மேலாண்மையா.தான் அமர்ந்திருக்கும் மரகிளையை வெட்டும் முட்டாள்,மனிதனாக மட்டுமே இருக்க முடியும்.வேறெந்த உயிரினமும் இவ்வளவுக்கு இயல்பு மீறியதன்மையை கொண்டிருக்கவில்லை.பசியுணர்தல்,காமஉணர்தல்,துயிலுணர்தல் என்று அடிப்படை உணர்வுகளுடன் மட்டுமே எல்லா உயிரினமும் இருந்துவிட,மனிதம் மட்டும் அற்புதமாய் இருந்தது.அழகை ரசித்தது,தன் துணையயை காதலித்தது,அன்பை பிரசவித்தது.அன்பே நீ என் தோளில் சாய கண்ணை மூடி,உலகை மறந்து இப்படியே இறந்துவிடுவோமா என்றது.ஈரய்ந்து காலம் சுமந்து,உன் யுகமெல்லாம் எனை நிறைத்து,பெற்றவளே!அக்கணமெல்லாம் ஊணுறக்கம் இழந்தாயா.என கவிதை பாட முனைந்தது,தென்றலின் வருடலில் திளைத்தது,நதியோரம் குளிர்ந்திருந்தது,மழலையின் சிரிப்பில் சுவாசிக்கவே மறந்தது.இன்று என்னதான் நடந்தது!

மனிதத்தை கொன்றுவிட்டு வேறொன்றாய் உருப்பெருத்தோமா!இல்லை
மனிதத்தை புதைத்துவிட்டு வேறொன்று எமக்குள் குடிபெயர்ந்ததா!!!

March 19, 2011 · Leave a comment

உண்மைகள் உறங்குவதில்லை

துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தோற்றுவிட்ட பூமியில் நம்பிக்கையின் அடையாளங்களாய் சிறுகீற்று கூட தெரியவில்லை.தசாப்பதங்களாய் இரத்த தாகமெடுத்து அகல வாய்பிளந்த மண் அது,இன்னும் தணியவில்லை.அது என்றும் தணியாது.தோல்கள் கிழிந்து,தசைகள் பிளந்து,இரத்தங்கள் சொட்டிக்கொண்டே இருக்கும் மனித உடல்கள் அந்த பூமியில் இன்னும் நிறைந்தே உள்ளது. புழுக்களாய் … Continue reading

March 18, 2011 · Leave a comment

இது கனவல்ல-எனக்கான வேதங்கள் ஓர் காலம்-I

இதுவும் ஒர் சிறுகதையே. 16.08.96 வவுனியா அன்பின் தம்பி அறிவது நலம்,நாடுவதும் அஃதே.நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து விட்டோம்.தனிய இருக்க விசரா இருக்கிறது.நாள் முழுக்க அறைக்குள் இருந்து எனக்கு விசர் பிடிக்க போகிறது.வவுனியாவில் ஓரிடமும் தெரியாது,போகவும் பிடிக்கவில்லை.துணுக்காய் போக விருப்பமாக இருக்கிறது.அங்கு … Continue reading

March 16, 2011 · Leave a comment

மரணித்தவர்கள்

பாழுங்கல்லறைகளில், விடிவே இல்லாத வானத்தின் சூரியர்களாக பொதுவுடமைவாதிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கும் எமை மானிடமே மறவாதிரு. கேள்விப்பட்டோம் மாவீரர்நாள் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று செய்யபோகின்றீர்களாமே!! நன்று, நன்று.இப்படிகூட நடக்காவிட்டால் நாம் எவ்வாறு எமை மனிதர்கள் என்று அழைத்துகொள்வது,இல்லையா சகோதரர்களே. வெடி ஏந்தி உடல் … Continue reading

March 15, 2011 · Leave a comment
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

யாழ்ப்பாணம்

சினிமா