20 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா தலமையிலான கூட்டுப்படைகளீன் தாக்குதலுக்கு பின் வெளியேறிய தலிபான்கள் மீண்டும் ஆப்கான் மண்ணில் கால்பதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளிலும் உற்பிரவேசித்த தலிபான் படைகள், தலைநகர் காபுலை கைப்பற்ற பல நாட்கள் எடுக்கும் என எண்ணப்பட்டது.ஆனால் சில நாட்களின் முன்னர் காலை விடிந்த போது காபுலின் தெருவெங்கும் சர்வசாதாரனமாக தலிபான்கள் உலாவிக்கொண்டிருந்தனர்.
ஆப்கான் அரச தலைவர், சேதாரங்களை தவிர்க்கும் முகமாக தான் நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்தார். அதன் பின்னர் இராணுவ தளபதியிடமிருந்து ஆயுதங்களை கைவிட்டுவிட்டு பின்வாங்குமாறு படைகளுக்கு உத்தரவு வந்தது. குறிப்பிடத்தக்கவாறு எந்த வித சண்டையும் இல்லாமல் தலிபான்கள் தலைநகரை கைப்பற்றினர்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி