Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மீண்டும் கட்டவிழ்க்கபடும் கொலைவெறி


violence by sinhala buddistஅண்மையில் இலங்கையின் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளில் நடப்பவை எவருக்கு அதிர்ச்சியளிப்பதாய் இருந்தாலும் தமிழர்க்கு எந்நவிதத்திலும் ஆச்சரியம் அளிப்பவை அல்ல.

இலங்கையில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின் காலத்துக்கு காலம் சிங்கள இனவாதம் கட்டவிழ்க்கப்பட்டு படுகொலைகள் அரங்கேற்றப்படுவது ஈழத்தீவின் நிதர்சனம்.

இந்த பின்னணியின் புறநிலையிலேயே தமிழர் வாழ்வியலை தற்பாதுகாப்பதற்க்கான ஆயுதப்போராட்டம் தமிழ்ர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மேம்போக்கான நிலையில் பூகோள அரசியல் காரணங்களை ஒட்டி,பயங்கரவாதமாக உருக்கொடுக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் உலகநாடுகள் வரிசையில் நின்று முண்டுகொடுக்க மிக கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.போரின் போது தமிழர் விடுதலைக்கான ஆயுத அமைப்பை அழிப்பதற்க்கான உத்தியாக , விடுதலைப்போர் அவசியத்திற்கு காரணமான விடுதலை வேண்டி நிக்கும் மக்களை ஒட்டுமொத்தமாய் அழிப்பதற்க்கான வியூகம் அமைக்கப்பட்டு கொடுரமாய் நடத்தப்பட்டது யுத்தம்.

குருரமாய் நிகழ்த்தப்பட்ட அந்த யுத்தத்தின் இறுதியில் ஈழ மக்கள் அழிந்துபோக அம்மக்களால் நிகழ்த்தப்பட்ட ஆயுதப்போராட்டமும் நீர்த்துபோனது.மீதமிருக்கும் ஈழமக்கள் நகரும் ஒவ்வொரு நாழினதும் இடைவெளிக்குள் சத்தமில்லாமால் சரிக்கட்டப்படுகிறார்கள்.

அரைநூற்றாண்டாய் குரூர கூட்டுக்கொலைகள் புரிந்துவந்த சிங்கள இனவாதம் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களை தாக்க ஆரம்பித்திருப்பது சமைக்கப்பட்ட விதிகளூடேயே நிகழ்கிறது.

பலமானதாய் உருவெடுத்திருக்கும் சிங்கள இனவாதத்திடமிருந்து தப்பிக்க வழியற்ற நிலையில் தமிழ்பேசும் இஸ்லாமிய மக்கள் தற்காப்புக்காய் ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதே சிங்களத்தின் திட்டம்.

ஆயுதம் தூக்கிய நிலையில் அம்மக்கள் மீது முழுநிலையில் நிகழ்த்தப்படும் கட்டமைக்கப்பட்ட யுத்தம் ,இலங்கையை சிங்களவரை தவிர வேறு எவரும் இல்லாத்தீவாக்கும்.

எல்லாமே நிகழ்ந்தேறிய பின்னர் குரல் கொடுக்கும் வழக்கமுள்ள சர்வதேசம் சிங்களத்தை மிகவிரைவில் தட்டிகேக்காவிட்டால் கட்டுப்படுத்தமுடியாத எதிர்விளைவுகளை இன்று நடக்கும் நிகழ்வுகள் உருவாக்கும்.

Thamilmahanக்காக – அழலாடி இளவல்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on June 18, 2014 by in ஈழம் and tagged , .
June 2014
M T W T F S S
« May   Sep »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: