சிலுவைகளை சுமக்கின்றோம்
ரோமர்களால் ஒரு தடவை சிலுவையிடப்பட்டார்
தேவன், 2000 ஆண்டுகளாய் கோடி தடவைகள்
மீண்டும் மீண்டும் சிலுவையிலிட்டோம் அவரை.
பாவங்களையே சுமக்கின்றோம்
எமது தவறுகளையும் எமக்குள் இருக்கும் பாவியையும்
சிலுவையிலிட மறுத்து
நாம் பாவங்களையே சுமக்கின்றோம்.
சிலுவையிலேயே தேவனை விட்டுவிட்டு
2000 ஆண்டுகளாய் தொடர்ந்து பாவங்களையே சுமக்கின்றோம்.
மனிதர்கள் நாங்கள் மாறவில்லை
தொடர்ந்தும் எமை நேசித்தவரையே சிலுவையிலிடுகின்றோம்.
2000 ஆண்டுகளாய் நாம் சேர்த்துக்கொண்டுவரும் சுமையை
தாங்க தேவனுக்கே முடியவில்லை
சிலுவை சுமை தாங்காமல் முறிந்தது.
அ.இளவல்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி