Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

MP ராதிகா, அடுத்த தேர்தலில் வெல்வாரா


mp rathika

சற்று முன்னர் புதியதலைமுறை தொலைக்காட்சி சேவைக்கு கனேடிய பாரளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் பேட்டி ஒன்று வழங்கியுள்ளார்.

அப்பேட்டியில் அவர்,புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தமிழர்களுக்காய் பெரிதாக எதுவும் செய்யவில்லை எனவும் தாயக தமிழர்களில் அனேகர் தனிநாடு வேண்டும் என்று கோரவில்லை என்றும் ஒரு நாட்டுக்குள் இரு தேசம் என்பதே அவர்கள் தெரிவு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,புலம்பெயர் தமிழர்களில் வீரவசனம் பேசுபவர்கள், தமது தனிப்பட்ட நலன்களுக்காய் தனி தனித்தாய் பிரிந்து நின்று போராட்டத்தை சிதைக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் அடுத்து வரஇருக்கும் பொதுத்தேர்தலை காரணமாய் கொண்டு நான் ஈழத்திற்க்கு செல்லவில்லை. கடந்த தேர்தலில் நான் 18 000 மேற்பட்ட வாக்குகளை பெற்று வென்ற எனது தொகுதியில் வெறுமனே 7 ஆயிரம் 8ஆயிரம் தமிழர்களே இருக்கின்றார்கள், அப்படியிருக்க இலங்கை விஜயம் எந்த வகையிலும் எனக்கு அரசியல் ஆதாயம் அளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் உண்மையில் தமிழர்கள் அவருக்க போட்ட 7 ஆயிரம் வோட்டுக்களை போடாமல் விட்டிருந்தால் அவர் வென்றிருக்கமாட்டார் என்பதே யதார்த்தம்.

எப்படியென்றால், ராதிகா அவர்கள் தமிழ் தேசிய நலனில் அக்கறையற்றவர் என கருதி தமிழர்கள் தமது வோட்டுக்களை அடுத்து வரும் தேர்தலில் அவருக்கு போடாமல்விட்டால் ராதிகாவால் வெல்ல முடியாது அதுவே உண்மை .

அப்படியிருக்க எவர்களால் அவர் வென்றாரோ அவர்களை மதிக்காமல் அவர்களது வோட்டுக்களால் தனக்கு எந்த ஆதாயமும் இல்லை என்ற அடிப்படையில் அவர் கருத்து கூறியிருப்பது அடுத்து வரும் தேர்தலில் அவர் தோற்க்க போவதை இப்போதே தெளிவாய் உரைக்கின்றது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: