Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

யாழில் மகிந்தா


CM Wigneswaran at thelipalaiதெல்லிப்பளையினில் நடைபெற்ற புற்றுநோய்சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் மகிந்தவை நோக்கி வடமாகாண முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் அதற்க்கு மகிந்த அளித்த பதில்,இதில் இருந்து சில பகுதிகளை இங்கு இணைத்துள்ளோம்.

மஹிந்த அவர்களே!

உங்களுக்கொன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாண மக்களின் சுய கௌரவம் சம்பந்தப் பட்ட விடயம் அது. அவர்கள் குறையை உங்களால் தீர்த்து வைக்க முடியும் என்ற எண்ணத்தில், நாட்டின் ஆணைபிறப்பிக்கும் சேனைத்தலைவர் ஆகிய உங்களுக்கு அதைக் கூறி வைக்கின்றேன்.

எமது வடமாகாண மக்களின் உள்ளார்ந்த சுய கௌரவத்தைப் பாதிப்பதாகவே இங்கு காணப்படும் பெருவாரியான இராணுவப் பிரசன்னம் நோக்கப்படுகின்றது. எமது பொருளாதார விருத்திக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பதையும் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும் விட இந்த உள்ளார்ந்த சுய கௌரவப் பாதிப்பு மிகவும் முக்கியமானதென்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏன் என்றால் இங்கு குடிகொண்டிருக்கும் இராணுவத்தினரில் அதிகப் பட்சமான பெரும்பான்மையினர் உள்ளூர் வாசிகளின் மொழியைப் பேசுவதில்லை, மதங்களைத் தழுவியவர்கள் அல்ல, அவர்களின் கலாசாரத்தில் ஊறியவர்கள் அல்ல, அவர்களின் ஊர்களைச் சேர்ந்தவர்களும் அல்ல. இங்கிருக்கும் இராணுவத்தினர் தொகைக்கு ஈடான தொகையினரான எமது தமிழ்ப்பேசும் மக்கள் அவர்கள் சார்பில் என்னைப் பேசுமாறு கட்டளையிட்டே என்னை என் பதவியை வகிக்க அனுப்பியுள்ளார்கள். அவர்களின் கட்டளையைச் சிரமேல் கொண்டே இதனை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன்.

நாட்டின் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எமக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் வடக்கு வாழ் மக்களின் நல உரித்துக்கள், அவர்களின் பாதுகாப்பு, அவர்களின் சுயகௌரவம் ஆகியவையுங் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். எங்கள் இந்த எதிர்பார்ப்புக்களுக்கு முரண்பட்டதாகத் தேசியப் பாதுகாப்பு அமைய வேண்டுமென்பதல்ல, இரண்டுமே பேணப்படலாம் என்பதே எமது கருத்து. ஆகவே எமது மக்கள் சார்பாக உங்களிடம் நான் கூறிவைப்பது யாதெனில் போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தலிலும் எம் மக்கள் வாழ்க்கையில் இராணுவ உள்ளீட்டைக் குறைப்பதிலுங் கரிசனை காட்டி இராணுவக் குறைப்புக்கான ஒரு கால வரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனைத் தடங்களின்றி நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அரசியலுக்கு அப்பாற் சென்று மனிதாபிமான முறையில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு விதவை தனது காணியை இராணுவம் கையகப் படுத்தி வைத்திருப்பதைக் காண்கின்றார். அதே காணியைப் போர்வீரர்களோ அவர்களின் குடும்பத்தவரோ அல்லது அவர்களின் உற்றார் உறவினர்களோ வந்திருந்து பதப்படுத்தி அதில் வேளாண்மை செய்வதைப் பார்க்கின்றார். அதில் வரும் வருமானங்களைச் சந்தைக்கு எடுத்துச் சென்று இராணுவத்தினர் சந்தைப் படுத்துவதைக் காண்கின்றார். அதே நேரந் தனக்கு இருக்க இடமில்லை, செய்தொழில் இல்லை, பாதுகாப்பு இல்லை என்பதை அவதானிக்கின்றார். அவரின் சுயகௌரவத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள். “ஏன் பிறந்தேன் நான்?” என்று அவர் அங்கலாய்ப்பது ஏன் எமக்கு புரியவில்லை? அவரின் சுயகௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் ஏன் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றோம்? போர் எமது மக்களைக் களைப்படையச் செய்துள்ளது. பாதிப்புக்களுக்கு உள்ளடக்கியுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்களின் பின்னரும் இந்த நிலை தொடரவேண்டுமா?

முதலமைச்சருக்கு மகிந்தவின் பதில்

mahindaவடக்கு முதலமைச்சருக்கு தெரிந்திருக்குமோ தெரியவில்லை. ஆனால் கடந்தகாலத்தில் மிக குறுகிய தூர இடைவெளியில் பல படைமுகாம்கள் காணப்பட்டன. அப்போது 75ஆயிரம் படையினர் வடமாகாணத்தில் இருந்தார்கள். இன்று அந்த முகாம்கள் மிக குறைக்கப்பட்டுள்ளது. படையினரின் எண்ணிக்கையும் 12ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. படையினர் முழுநாட்டிலும் இருக்க வேண்டும்.

அத்துடன் நீதியரசராக சீ.வி.விக்னேஷ்வரன் எங்கள் கௌரவத்தை பெற்றிருந்தவர். அவர் தற்போது அரசியல்வாதியாக எல்லா
மேடைகளையும் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை பார்த்து நான் சந்தோஷப்படுவதா? கவலைப்படுவதா? என்பது எனக்கு தெரியாது.

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: