Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சட்ட பஞ்சாயத்து


உபகண்டம் முழுதும் வளமுடனும் சீருடனும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் . பல ஆயிரம் ஆண்டுகளாக எமது தேசத்தின் மீது தொடர்ச்சியாக  நிகழ்த்தப்பட்டுவரும் கலாச்சார இனஅழிப்பு படையெடுப்புக்கள், பரந்த பாரதத்தின் தென் பகுதியின் ஒரு மூலையிலும் ஈழத்தின் யாழ்குடாநாட்டுக்குள்ளும் எம்மை அடக்கி, அழித்துவிடுவார்களோ என்று எவரும் அஞ்சும் வகையில் எம்மை கொடும் பகை சூழ்ந்துள்ள நிலையில் ,வீழ்ந்துவிடோம் என தமிழர்கள் பல முனைகளில் திரண்டுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் தமிழகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவரும் இயக்கங்களில் ஒன்றை இங்கு பதிவு செய்கின்றோம்.

satta panchayat

*****************                          **********************

சட்ட பஞ்சாயத்து இயக்கம் என அழைக்கப்படும் இந்த அமைப்பு ஏன்.

1.அ) நோக்கங்கள்:

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும்…

  • இலஞ்ச,ஊழல்,முறைகேடுகளற்ற சட்டத்தின் ஆட்சியை வழங்கி
  • பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை(கல்வி,தொழில்,விவசாயம்) அளித்து
  • தரமான சமூகக் கட்டமைப்பை(குடிநீர்,மின்சாரம்,மருத்துவம் போன்ற..) ஏற்படுத்தி
  • குடும்பங்களை,சமூகத்தைச் சீரழிக்கும் மதுவை ஒழித்து
  • இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற எதிர்கால தலைமுறையின் நலனில் அக்கறை செலுத்தி

“அனைவருக்கும் வளர்ச்சி” தரும் “நல்லாட்சி” அமைவதற்கான விழிப்புணர்வு, கருத்தாக்கம், களச்செயல்பாட்டுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டதே சட்ட பஞ்சாயத்து இயக்கமாகும்.

ஜனநாயக நாட்டில், தங்களது உரிமைகளையும், கடமைகளையும் உணர்ந்த குடிமக்கள் உள்ள போது, நீதிக்குத் துணைநிற்கும்-அநீதிக்கு எதிர்நிற்கும் பொதுமக்கள் பெருகும்போது, ஆட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நல்லாட்சி தந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத்தான் “குடி உயர, கோன் உயரும்” என்கிறது நம் முதுமொழி. இந்த அடிப்படையில், ஜனநாயகம், நல்லாட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் கடமைகளை உணர்ந்து செயலாற்றி, உரிமைகளை உரத்த குரலில் கேட்பதற்கு குடிமக்களைத் தயார்படுத்தும் இயக்கமே சட்ட பஞ்சாயத்து இயக்கம்.

****************************************************************************

கீழே உள்ள காணொளியில் மேலும் அவர்களை பற்றி அறிய

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: