Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தற்கொலைகளும் சமூகத்தின் தோல்வியும்


sucide

 

 

அண்மையில் லண்டனில்  தமிழ் பெண் ஒருவர் தனது 7மாத குழந்தையையும் 5வயது மகனையும் கொன்றபின்னர் தானும் தற்கொலைசெய்து கொண்டுள்ளார்.

கென்ரன் எனும் பகுதியில் 33வயதேயான இந்த பெண் தனது பிள்ளைகள் கணவருடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களது வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் நடந்ததாகவும் அவர்கள் அமைதியாக வாழ்ந்ததாக தெரியவில்லை எனவும் அருகில் வசித்தவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அவ்வப்போது ஆங்காங்கே தற்கொலைகள் நடந்ததாய் செய்திகள் வரும்போதும் அங்கு நிகழ்ந்தது வெறுமனே ஒருவரின் மரணம் மட்டும் அல்ல கூடவே சமூகத்தின் தோல்வியுமே. அவர்கள் வாழ்வின் தோல்விக்கு சுற்றி வாழ்ந்த நாம் ஒவ்வொருவரும் காரணமாகிறோம்,சமூகமாய் அவர்களை தோற்கடித்திருக்கின்றோம்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாம் எல்லாத்துறைகளிலும் முன்னேறியவர்களாய் பலமான கட்டமைப்பை கொண்ட மிகவும் நெருக்கமான வலையமைப்பை கொண்டவர்களாய் இருக்கின்றோம்.அப்படியெனில் எங்கு சறுக்கின்றோம்.

எமது அமைப்புகளின் செயல்வீச்சு எங்கேயோ நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருக்கும் சிதைந்துகொண்டிருக்கும் ஒருவரை சென்றடைகின்றதா!

மனநலன் பாதிப்புக்குள்ளாகிகொண்டிருக்கும் ஒருவர் தானே அதை கண்டறிந்து பின் உதவி வழங்கும் அமைப்புகளை தேடிவருவார் என்பது எல்லா சூழ்நிலைகளிலும் சாத்தியமா!

எல்லா மனிதர்களாலும் தம் வாழ்வில் தோன்றும் பிரச்சினைகளை சரியான முறையில் கையாள தெரிந்திருப்பது சாத்தியம் இல்லை.தீர்க்கபடாமல் திரளும் தொடர் பிரச்சினைகள் என்றோ ஒரு நாள் மிக ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளும்.அது நடக்காமல் இருக்க ஒவ்வொரு பிரச்சினை தோன்றும் போது அதை அவ்வப்போதே தீர்க்க உதவிகள் ஆலோசனைகள் வழங்குவது அவசியம்.

இந்த ஆலோசனைகள் வெறுமனே சமூக அமைப்புக்களின் கோப்புகளுக்குள் இருப்பது அல்லாமல் மக்களை சென்றடையவேண்டும்.இந்த இடத்தில் தமிழ் ஊடகங்களை பயன்படுத்துவது அவசியமாகின்றது.அவ்வப்போது தொடர்ச்சியாய் வானொலிகள்,தொலைக்காட்சிகள்,பத்திரிகைகள் ஊடே நிபுணத்துவ ஆலோசனைகள் பரப்படவேண்டும்.குடும்பங்களில் உண்டாகும் சிக்கல்களை ஆரோக்கியமான முறையில் தீர்க்க சொல்லி கொடுக்கபடவேண்டும்.குடும்ப அங்கத்தவரிடையே ஆரோக்கியமான உரையாடல் என்ற ஒன்றே இல்லை என்ற நிலையில் பலர் வாழ்கிறார்கள்,இது மாற்றப்படவேண்டும்.

காலனித்துவ காலத்தில் இருந்து இன்றுவரை தொடர்ச்சியாய் பல நூற்றாண்டுகளாய் அரசிழந்து,எம் நலன் பேணும் அரசென்று ஒன்று இல்லாததால் சீரான சமூக வாழ்வு இல்லாதவர்கள் நாம். இதனால் பலர் உளவியல் ரீதியாய் ஆரோக்கியமற்ற ஒரு சமூகமாகவே நாம் இருக்கின்றோம்.அதுவும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை எமக்குள் இன்னும் பாரிய பாதிப்புக்களை உண்டாக்கிகொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் வாழ்வியல் மேம்பாட்டுக்கான செயல்பாடுகள் இன்னும் வீரியாமாய் முன்னெடுக்கபடவேண்டும்.

ஒரு தனிமனிதனின் தோல்வி ஒரு சமூகத்தையே பாதிக்கும்,பலவீனமான சமூகம் அந்த தேசத்தையே பாதிக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on January 11, 2014 by in புலம் and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: