Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

யாழில் ஆயுதக்குழு!


யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும்  ‘ஆவா’ என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடாநாட்டு ஊடகவியலாளர்களினில் ஓரு பகுதியினர் இன்று பொலிஸ் வாகனங்களினில் ஏற்றப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரிகையாளார் மாநாடொன்றும் நடத்தப்பட்டிருந்தது.

அங்கு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறிக்கொண்ட ஆயுதங்கள் காண்பிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட குழுவிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள், 12 வாள்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கபடுகின்றது.jaffna gang bikers arrested

கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் புகுந்த குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவ்வாறான கொலை, கொள்ளைச் சம்பவங்களை  ‘ஆவா’ எனப்படும் ஒரு குழுவே மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவுக்கு இணுவில் பகுதியினைச் சேர்ந்த குமரேசன் வினோதன் (21) (ஆவா வினோத்) என்ற இளைஞனே தலைமை தாங்குவதாகவும் தெரியவந்ததாக கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இதனையடுத்து, அக்குழுவின் தலைவர் உட்பட 9பேரை தாம் கைதுசெய்ததாகவும்  அவர்களிடமிருந்து ஆயுத உபகரணங்கள் சிலவற்றை தாம் மீட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இத்தகைய கும்பல்களின் பின்னணியினில் இராணுவ புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தாம் சந்தேகம் கொண்டுள்ளதாக கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on January 7, 2014 by in ஈழம் and tagged .
January 2014
M T W T F S S
« Dec   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: