அமெரிக்காவில் இந்திய ராஜதந்திரி தேவயானியின் கைதும் அவரை நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததாக செய்திகள் வெளியான நிலையில்
இந்திய டெல்லி அரசு பக்கம் இருந்து கடுமையான வார்த்தையாடல்கள் எதிர்ப்பும் நடவடிக்கைகள் என இவ்விரு நாடுகளின் உறவு நிலை புதியபாதையில் திரும்பியுள்ளது.
சட்டத்துக்கு புறம்பான நடவடிகையில் ஈடுபடுவோரை கைது செய்வதென்றால் அமெரிக்காவில் உள்ள தூதரங்களில் எத்தனையோ பேரை கைது செய்யும் நிலை உள்ளது,அப்படி இருக்கையில் எமது ராஜதந்திரியின் கைது நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குருசித், அமெரிக்க அரசுக்கு உலகில் பல எதிரிகள் உள்ள நிலையில் தாம் டெல்லி அமெரிக்க தூதரகத்திற்க்கான பாதுகாப்பை எந்தவிதத்திலும் குறைக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டு அமெரிக்க தூதரகத்திற்க்கு முன்னால் வீதியில் போடப்பட்ட பாதுகாப்பு தடுப்பு சுவர்களை அகற்றியது இரட்டை அர்த்தம் கொண்டதாகவே உள்ளது.
அதேவேளையில் பிஜேபி தலைவர் யஸ்வான் சின்க கருத்து கூறையில் அமெரிக்க அரசு எமது ராஜதந்திரிகளை இவ்வாறு தான் கையாளும் என்றால் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்வதாக கூறப்படும் ஒரின சேர்க்கையாளர்களை இந்திய அரசு அவர்களது விசாக்களை ரத்தாக்கி கைது செய்து சிறையில் போடவேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சம்பவங்களின் பின்னனியில் இந்திய அரசு அமெரிக்க தூதரகத்திற்க்கு வழங்கியிருந்த சலுகைகள் மற்றும் சேவைகளில் மாறுதல்களை கொண்டுவந்திருக்கின்றது.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி