Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ஓயாத தீர்மான அலைகள்


தொடர் தீர்மானங்கள் இயற்றவும் கடிதங்கள் வரையவும் முடிந்தவர்களால் அடுத்த தீர்மானம்.

karunanidhiவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அதிகாரங்கள் காகிதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்திருப்பதாகவும் இந்த நிலையில் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுலாக்குவதற்கு, நாட்டு மக்களிடையே திறந்த கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்த, இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் ஒன்றை நிறவேற்றியுள்ளது.

இன்று நடைபெற்ற கட்சியின் பொது குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.இலங்கைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான அடிப்படையாக அமைந்துள்ள 13ம் திருத்தச் சட்டம் இன்னும் அமுலாக்கப்படவில்லை.இந்த நிலையில் மாகாண சபைகளின் அதிகாரங்கள் வெறும் காகிதங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காணப்படுகின்றன.

தற்போதுள்ள நிலைமையின் படி, மாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்படும் யோசனைகளை மாகாண ஆளுனரோ அல்லது ஜனாதிபதியோ நிராகரிக்கமுடியும்.இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால், இலங்கை மக்கள் அரசியல் தீர்வு என்ற ஒன்றையே மறந்து விடும் நிலைமை ஏற்படும்.எனினும் இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐயா பெரியவரே, தமிழர்களுக்கு தேவைப்படுவது பெருங்காரியங்களே. கடிதங்களோ தீர்மானங்களோ அல்ல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: