இவர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள்

சிவகுமார் – பேரின்பவதனி தம்பதியினர் ஜெர்மனியினில் வசித்துவருகிறார்கள். புலம்பெயர் தமிழர்களான இவர்கள், தமது பிறந்த தினத்தினை வன்னியினில் யுத்த அவலங்களுடன் வாழும் குடும்பமொன்றிற்கு கைகொடுத்ததன் மூலம் கொண்டாடியுள்ளனர்.
கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையினில் தள்ளுவண்டில் மூலமே தமது வாழ்வை தொடரும் ஒரு முன்னாள் போராளிக்கு கைகொடுக்கும் வகையினில் அவர்கள் தமது அன்பளிப்பினை கெல்பிங் கார்ட்ஸ் அமைப்பினூடாக வழங்கியிருந்தனர்.
வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவரான ச.சஜீவன்,இவ்வுதவியினை பொறுப்பேற்று கையளித்திருந்தார்.
களியாட்டங்களுக்காய் பணத்தை வாரியிறைக்கும் எம்மவர்கள் இவர்களின் உணர்வை உள்வாங்க வேண்டும்.
எமது வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்காய் நாம் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினாலே இவ்வாறான மனிதநேய பணிகளை ஒவ்வொருவரும் செய்யமுடியும்.சாதாரானமாய் ஒரு பார்ட்டிக்கு வாங்கும் 5Black Label ல் இரண்டை குறைத்து 3 ஐ மட்டும் வாங்குவதால் நீங்கள் சேமிக்ககூடிஉய $100 அங்கு அன்றாட உணவுக்கே தவிக்கும் எம் உறவு ஒன்றுக்கு உதவும்.
1000 வருட சுழற்ச்சியில் இன்று ,அரசிழந்த எம் தேசியத்தை மீட்டெடுக்கும் வரலாற்று காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இங்கு இப்போது நடக்கும் எல்லாமே வரலாறாய் பதிவு பெறப்போபவை.
ஒரு சிறு துரும்பாய் இருந்தாவது உங்களை இதில் இணைத்து கொள்ளுங்கள்.
Like this:
Like Loading...
Related