தமிழீழ விடுதலைக்காக உயிரீந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளான நவம்பர் 27 – மாவீரர் நாளையொட்டி, வடசென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில், தண்டையார்பேட்டையில் மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தற்சார்பு உழவர் இயக்க அமைப்பாளர் திரு. கி.வே.பொன்னையன், தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன், இயக்குநர் புகழேந்தி தங்கராசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் இதில் பங்கேற்று உரையாற்றினர்.
பல்லாயிரக்கணக்கான ம.தி.மு.க.வினரும், தமிழின உணர்வாளர்களும் இந்நிகழ்வில் எழுச்சியுடன் பங்கேற்றனர்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி