Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

சென்னை விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை!


சென்னை விமான நிலைய இயக்குனர் திரு சுரேஷ் அவர்களை நேரில் சந்தித்த தமிழக அமைப்புகள், கட்சிகள்  மனு ஒன்று கையளித்துள்ளார்கள். அவர்களுடைய கோரிக்கைகள் யாவையும் பொறுமையுடன் விசாரித்த இயக்குனர்,கோரப்பட்டவைகளை தன்னுடைய சக்திக்கு உட்பட்டு நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்.

chennai airport

தமிழர் பண்பாட்டு நடுவம், நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

  •  தமிழக பயணிகள் விமான நிலையத்தில் தமிழ் தெரியாத பாதுகாவலர்களால் சொல்ல முடியாத மன வேதனை அடைகின்றனர் . பயணிகள் தமிழில் பேசுவது அவர்களுக்கு புரியவில்லை. சில சமயம் வாக்கு வாதம் முற்றி பாதுகாவலர்கள் பயணிகளை வன்மையாக நடத்தும் நிலை வருகிறது. தமிழ் தெரிந்த பாதுகாவலர்களை இங்கு நியமித்தால் தமிழக பயணிகள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். அதனால்   விமான நிலைய பாதுகாவலர்கள் (பயணிகளோடு தொடர்பில் இருக்கும் பாதுகாவலர்கள்) தமிழில் உரையாடத் தெரிந்தவர்களையே நியமித்தல் வேண்டும்.
  •  தமிழக அரசின் ஆணைக்கேற்ப, விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருத்தல் வேண்டும்
  • விமான நிலையத்தில் உள்ள புத்தக கடைகளில் தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், தமிழ் நூல்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும்.
  • தமிழக பயணிகளின் வசதிக்கு விமான நிலையத்தில் தமிழ் நாளேடுகள் வழங்கப்பட வேண்டும்.
  •  குடிவரவு பகுதியில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளை வரவேற்க ‘வணக்கம்’ என்று எழுதிய பலகை வைக்கப்பட வேண்டும்.
  •  விமான நிலையத்தில் உள்ள அனைத்து அறிவிப்புகளும் தமிழில் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
  •  தமிழகத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு கவச உபயோகம் பற்றிய அறிவிப்பு தமிழில் வேண்டும். இது தமிழ் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விடயமாகும். அதனால் இதை கட்டாயம் நடைமுறைப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: