Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

ஐயா நெடுமாறன் விடுதலை


இந்திய  – சிங்களக் கூட்டுப்படைகளால் இனப்படுகாலை செய்து கொல்லபட்ட தமிழீழ மக்களின் நினைவாக, தஞ்சை விளாரில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் அமைந்திருந்த பூங்காவையும், சுற்றுச்சுவரையும், 13.11.2013 அன்று அதிகாலை சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியது தமிழக அரசு.

 

mulivaikkaal muttam in thanjavur

தமிழக அரசின் இச்செயலை எதிர்த்த, ஐயா நெடுமாறனோடு முற்றத்தில் இருந்த, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, திருச்சி மாநகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் த.கவித்துவன், தமிழ்நாடு மள்ளர் களம் அமைப்பாளர் திரு. செந்தில் மள்ளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு செயல்பாட்டாளர்கள் என 80 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

periyavar nedumaran nedumaran aiya released aiya nedumaran nedumaran aiya

இந்த செயல் பலத்த கண்டனங்களையும் எதிர்போரரட்டங்களையும்பல மட்டங்களில் தோற்றுவித்திருந்தது,இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறையிலிருந்த  அனைவருக்கும் தஞ்சை மாவட்ட நீதிமன்றம் பிணை மறுத்துவிட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டு, அனைவருக்கும் 20.11.2013 அன்று எவ்வித நிபந்தனையும் இன்றி, நீதிமன்றப் பிணையாணைப் பெறப்பட்டது.

இதனையடுத்து, இன்று (22.11.2013) காலை திருச்சி நடுவண் சிறையிலிருந்து அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட தோழர்கள் விடுதலையாயினர். சிறை வாயிலில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பாளர் திரு. குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் தமிழ்நேசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தோழர்களும் அவர்களை வரவேற்றனர்.

சிறையிலிருந்த மீண்டவர்கள் தஞ்சை விளார் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கே சென்றார்கள். செல்லும் வழியில் புதுக்குடி,செங்கிப்பட்டி மற்றும் வல்லம் பகுதிகளில் அவர்களுக்கு பலத்த வரவேற்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

November 2013
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: