Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

50 ஆண்டுகளின் பின் ஈழத்தில் மெங்கலே


angel of death mengele

உலகில் இனசுத்திகரிப்பில் ஈடுபட்டவர்களில் ஜேர்மனிய நாசிக்கள் கொடியவராய் அறியப்பட்டவர்கள்.

‘ஜோசெப் மெங்கெலே’ சாவின் தூதுவன் என அறியப்பட்ட  ஒரு கொடியவன். கிட்லரின் நாசிக்கள் கூட்டத்தை சேர்ந்த இவன் ஒரு விஞ்ஞானி,மானிடவியல் துறையில் PhD பட்டப்படிப்பு முடித்தவன்.

தனது அறிவை கிட்லரின் இனவாத கொள்கைகளுக்காய் பயன்படுத்தியவன்.1940 களில் கொல்வதற்காய் திரட்டப்பட்ட லட்சக்கனக்கான யூதர்கள் ,இவனது ஆராய்ச்சிக்கூடத்தில் கொடூரமாய் கொல்லப்பட்டார்கள்.பூமியில் ஆரிய இனவெள்ளையர்களே இருக்க வேண்டும் என்ற கிட்லரின் இனவாதத்திற்கு வடிவம் கொடுக்க உழைத்த நாசிக்களில் இவனும் ஒருவன்.வெள்ளை தலை மயிரும் நீலக்கண்களும் கொண்ட வெள்ளை ஆரியர்களின் சனத்தொகையை உயர்த்துவதற்கு தமது பெண்கள் எல்லோருமே ஒரே தடவையில் இரட்டை பிள்ளைகளை பெறவேண்டும் என கருதிய இவன் ,அதற்க்கான ஆராய்ச்சியில் பல யூத பெண்களை பலிகொடுத்தான்.

2ம் உலகப்போருக்கு பின்னான காலத்தில் தமெக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கிய யூதர்களின் புலனாய்வு துறையான மொசாட் தென்மெரிக்காவில் தலைமறைவாய் இருந்த ”மெங்கலே” யை கடத்துவதற்காய் பெருமுயற்ச்சி எடுத்திருந்தார்கள்.

மேற்க்குலகத்தால் மானிடத்துக்கெதிரான குற்றம் புரிந்தவர்கள் என்ற வகையில் ஏராளமான  நாசிக்கள் தண்டிக்கபட்ட போதும் இவன் தனது இறுதிக்காலம் வரை தப்பித்தவன்.

யூதர்கள் மீதான இனப்படுகொலை ஆரம்பிக்கும் முன்னரே தடுத்திருக்க  தவறிய உலக நாடுகள் இன்று தமிழர்கள் மீது தொடுக்கப்படும் இனப்படுகொலையையும் தடுப்பதற்க்காய் உடனடி நடவடிக்கைகள் எதனை  எடுக்க தவறிவருகின்றன.

சிலமாதத்திற்கு முன்னர் வன்னிப்பகுதியில் பல கிராமங்களை சேர்ந்த தமிழ்ப்பெண்கள் திரட்டப்பட்டு நீண்ட கால கருத்தடை மருந்து அவர்களுக்கு கட்டாயபடுத்தி செலுத்தப்பட்டது,இதன் மூலம் வன்னி பிராந்தியத்தில் தமிழர் சனத்தொகையை வெகுவில் குறைக்கும்.இதன் நோக்கம் மிகவும் வெளிப்படையாய் சிறுபிள்ளையே அறிந்து கொள்ளும் வகையில் இருந்தும் உலகநாடுகள் தமக்கான அட்டவணையிலேயே இயங்குகின்றன.

சில நாடுகள் தமிழரின் நலனக்காய் நகர்வுகளை மேற்கொண்டாலும் வடஇந்திய ‘டெல்லி’ அரசு அவர்களை தடுத்து சிங்கள அரசை இன்றும் பாதுகாத்துவருகின்றது.

தமிழக உறவுகளின் தோள்களிலேயே எல்லாச்சுமைகளும்.காலம் தாழ்த்தாதீர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Information

This entry was posted on November 10, 2013 by in ஈழம் and tagged .
November 2013
M T W T F S S
« Oct   Dec »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: