Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மலேசிய தமிழர் ஆதரவு


நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடக்கவிருக்கும் நிலையில் அதனை புறக்கணித்தும்,புறக்கணிக்கவேண்டியும் எழும் குரல்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்தவண்னமுள்ளன.

chogm commonwealth

 

கனடிய பிரதமர் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்ததும், அதனையொட்டி தமிழக சட்டசபையில் அதனை புறக்கணிக்குமாறுவேண்டி தமிழக முதலமைச்சரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அண்மையில் நடந்த நிகழ்வுகள்.

lim guan eng

 

 

 

 

தற்பொழுது மலேசியாவின் பினாங் மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இம்மாநாட்டை புறக்கணித்தும், மலேசிய பிரதமரை புறக்கணிக்குமாறு வேண்டியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.ஜனநாயகத்தை பெரிதும் மதிக்கும் தமது கட்சி,இலங்கை புரிந்த பெரும் குற்றங்களை விட்டுக்கொடுக்காது எனவும், இறுதி போரில் மரித்துப்போன தமிழருக்கு மரியாதை அளிக்கும் வகையில் தமது நாட்டு பிரதமர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது எனமேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் லிம் குவான் எங் ஜனநாயக செயல் கட்சியின் பொதுச்செயலாளர்,இக்கட்சி மலேசியாவில் இரண்டாவது பெரிய கட்சி ஆகும்.இதன் தேசிய உதவித்தலைவராக மு.குலசேகரன் எனும் தமிழரும், பிரதி முதலமைச்சராக பேராசிரியர் ராமசாமியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: