Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தொடரும் தமிழக முதலமைச்சரின் அதிரடிகள்


tamilnadu chief minister selvi jeyalalitha

இந்தியபிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்லாமல் சிறிய அளவிலேனும் இந்திய தரப்பில் இருந்து எவரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி,சில தினங்களுக்கு முன்  தமிழக சட்ட சபையில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8.6.2011 ல் இலங்கை போர்க்குற்றவாளி என பிரகனப்படுத்த ஐநா சபையை இந்தியா வலியுறுத்தவும்,ஈழத்தமிழரின் உரிமைகள் நிலைநாட்டப்படும்வரை இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரதடை கொண்டுவரவும் வேண்டி ஒரு தீர்மானத்தை தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றினார்.

மீண்டும் 27.3.2013 ல் ஈழத்தமிழரின் விடிவிக்காய், தனி ஈழத்திற்க்கான பொதுவாக்கெடுப்பு நடத்திட ஐ.நா பாதுகாப்புச்சபையில் தீர்மானத்தை இந்தியா கொண்டுவரவேண்டி ஒரு தீர்மானத்தை தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றினார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவிருக்கும் நிலையில்,கனடாவின் பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பர் இலங்கை அரசை கண்டித்து அதனை புறக்கணித்ததையொட்டி இப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சர், இந்திய மத்திய அரசு இலங்கையில் நடைபெறவிருக்கும் மாநாட்டை முற்றாக புறக்கணிக்குமாறு வேண்டி இப்புதிய தீர்மானத்தை  தமிழக சட்ட சபையில் நிறைவேற்றியுள்ளார்.

வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசிதரன் ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: