Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

நன்றிசெலுத்த அணிதிரள்வோம்


வருகின்ற ஒக்டோபர் 28 திகதி கனேடிய தமிழர் சமூகம் மீண்டும் அணிதிரள்கிறது தமது பாராளுமன்றை நோக்கி.

இம்முறை தமிழர்கள் ,நன்றி செலுத்தும் முகமாக ஒன்றினைகிறார்கள்.

His excellency prime minister

கடந்த 30 மாதங்களாக மதிப்புக்குரிய கனேடிய பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பரின் நகர்வுகள்,தமிழர்க்கு ஆதரவளிப்பதாயும் தமிழர் தம் தேசியவிடுதலையில் மாற்றுதலை உண்டாக்குபவையாகவும் அமைந்து வருகின்றன.

2011ல் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகளை முதன்மைபடுத்திவரும் ஒரே நாடான கனடா,இந்த ஆண்டு நியோர்க்கில் நடைபெற்ற ஐ.நா வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கை விடயத்தை உட்புகுத்தியது.

சிங்கள அரசுக்கெதிராய் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளையும் அமெரிக்காவுடன் இணைந்து முன்மொழிந்த நாடு கனடா,அதுமட்டுமல்லாமல் அந்த பிரேரணைக்கு ஆதரவழித்த நாடுகளுக்கு உத்துயோகபூர்வமாக நன்றி தெரிவித்த நாடு கனடா.

2006ல் இருந்து ஆட்சியில் இருக்கும் கொன்சேர்வெட்டிவ் கட்சி,எதிர்கட்சியான புதிய ஜனநாயகக்கட்சி,மற்றும் லிபரல் கட்சி என அனைத்து கட்சிகளும் தமிழர் மீது கரிசனை கொண்ட தமிழர் ஆதரவு நாடாக கனடா தனது வெளியுறவுக்கொள்கையை கொண்டுள்ளது.

prime minister harper                                                                                               prime minister stephen harper

இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்தது மட்டுமல்லாமல்,சிங்கள அரசின் மனித குலத்திற்கு எதிரான குற்றமும், அதே அரசு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதும்  அந்த அமைப்புக்கே அவமான செயல் என அறிவித்த மாண்புமிகு பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பர், அந்த அமைப்புக்கு கனடா வருடாந்தம் வழங்கும் நிதியான $20 மில்லியனை மீள்பரிசீலனை செய்யவிருப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.

இந்த நிலையில் கனடிய தமிழர் சமூகம், கனேடிய பிரதமர் ஸ்ரிபன் கார்ப்பருக்கும் அவரது அரசிற்கும் மற்றும் கனேடிய பத்திரிகை சமூகம் கனேடிய அரசியல் கட்சிகள் என ஒட்டுமொத்த கனேடிய தேசத்திற்கும் தமது நன்றியை தெரிவிப்பதற்கு தமது பாராளுமன்றமுன்றலில் அணிதிரளுமாறு  கனேடிய தமிழர் சமூக அமைப்புக்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

இளையர்களே மற்றும் ஒருமுறை கடமை உமை அழைக்கின்றது,தோளை தட்டி புறப்படுங்கள் ஒட்டாவாவிற்கு.

IMG-20131018-00401

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on October 18, 2013 by in புலம் and tagged , , .
October 2013
M T W T F S S
« Sep   Nov »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Like us on Social Media

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: