26 ஆண்டுகளுக்கு முன் உலகம் அதிகம் அறிந்திராத, யாழ்ப்பாணத்தின் ஒரு ஊரில் இளமை ஒன்று தன்னை உருக்கி எரித்து கொண்டிருந்தது.
ஈழத்தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஊர் அது. ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண ராச்சியத்தின் தலைநகர் அது. பெரும் புகழ் வாய்ந்த நல்லூர் கோவிலை தன் மீது சுமந்த ஊர் அது.
அந்த ஊரின் பெரும் கோவிலில் எரியாத விளக்குகளே இல்லை,விளக்குகள் எரிந்திராத நாட்களும் இல்லை. ஆனால் 1987 ஆண்டின் ஒரு நாளில் அந்த கோவிலின் வாயிலில் அபூர்வமான தீபம் ஒன்று அணையும் திகதியை குறித்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
இளமையின் சுகங்களை தூக்கி எறிந்துவிட்டு நாட்டுக்காய் போராட போன ஆயிரக்கணக்கான இளையவர் வழியில் ஏகே தூக்கியவன், காந்திய தேசத்தின் வேசத்தை கலைக்க தன்னையே நல்லூர் கோவிலின் பெருவிளக்காய் எரித்து கொண்டிருந்தான்.
திலீபன் ,அவன் உயிர் பிரிவதை தடுக்க முடியபோவதில்லை என்பதை புரிந்த கொண்ட மக்கள் அன்று பட்ட வேதனையை சொல்லி புரியவைக்க முடியாது.
மேடையில் வாடிக்கொண்டிருந்தது அவன் உடல், மறுபுறம் அவனுக்காய் நல்லூரை சுற்றி திரண்டிருந்த லட்ச கணக்கான மக்கள் ஓவென்று கதறி அழுதழுது மயங்கி கொண்டிருந்தனர் , அது ஒரு கொடுமை பெரும் கொடுமை அன்று நல்லூரில் அரங்கேறிக்கொண்டிருந்தது.
எம் திலீபனை அன்று மீட்டிட எம்மால் முடியவில்லை,தில்லி எம்மை பார்த்து எக்காளித்தது.
எல்லாமெ கையை விட்டு போய்விட்டிருந்தது.
அந்த அருமையானவனின் நினைவு நாள் உலகெங்கும் தமிழர்களால் நினைவுகூரப்பட்டது.
ஜேர்மனில் நடந்த நிகழ்வுகளை கீழே பபார்க்கவும்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி