வடமாகாணத்தில் தேர்தல் நிறைவடைந்துள்ளது.காலை 7.00 மணி முதல் வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டிருந்தது. பெருந்தொகையான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று மக்கள் வாக்களித்ததையும், தள்ளாடும் வயதில் உள்ளவர்கள், யுத்தத்தால் அங்கவீனமானவர்கள், நடக்க முடியாதவர்கள் என்று பலரும் வாக்குசாவடி நோக்கிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
சிங்கள அரச தரப்பு எல்லாவிதமான அடக்குமுறை தந்திரங்களையும், உளவியல் தாக்கு முறைகளையும் கையாண்டிருந்தது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வெற்றியை தடுப்பதற்கு.
த.தே.கூ உறுப்பினர்கள் பரவலாக எல்லாப்பகுதியிலும் தாக்கபட்டுள்ளார்கள்,இருந்தாலும் வாக்குச்சாவடிகள் அமைந்த பகுதிகளில் த.தே.கூ பிரசன்னம் மக்களை துணிவுடன் வெளிவரவைத்துள்ளது.
திருநெல்வேலி பகுதியில் த.தே.கூ உறுப்பினர் தாக்கப்பட்ட போது, த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ளார்கள்.
தேர்தல் கண்காணிப்பு உறுப்பினர்ளும் த.தே.கூ உறுப்பினர்களும் தாக்குதல் நடத்தபட்ட இடங்களுக்கு உடன் உடன் சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றுள்ளார்கள்.
சர்வதேச ஊடகங்களின் பிரசன்னமும் யாழ்,கிளிநொச்சி நகரங்களில் உணரமுடிந்தது.
தேர்தல் முடிந்துவிட்டது இப்போது அடுத்ததற்கான காத்திருப்பு தொடங்கிவிட்டது.
காணொலி -அல்ஜசீரா
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி