Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

இணையப்பாவனை ஆபத்துக்கள்


lonely worldலோன்சாட்.கொம் என்ற இணையத்தளம் தன் சேவையை இடைநிறுத்தி தன் இணையத்தளத்தை மூடிக்கொண்டுள்ளது.

நடந்து போன தவறை உணர்ந்து Facebook தன் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்தது.

முறையான கவனிப்புகள் அற்று  Facebook இவ்வாறு நடந்து கொள்வதா என அதிர்ச்சியலைகள் கனடியர்களை தாக்கியது.

 

‘ரெற்றையா பெர்சொன்’ என்பவரின் படத்தை இணைத்ததாய்  Facebookல் லோன்சாட்.கொம் இணையத்திற்காய் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்றால் ஏற்பட்ட விளைவுகளே மேற்க்கூறப்பட்டவை.

‘ரெற்றையா பெர்சொன்’ என்பவர் கடந்த ஏப்ரலில் தற்கொலை முயற்சியில் மரணத்தை தழுவிக்கொண்டவர்.பலத்த சர்ச்சைகளையும் வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்திய இந்த இளம்பெண்ணின் மரணம், இணையத்தில் இவரை கேவலப்படுத்தி வெளியிடப்பட்ட படங்களினதும் வீடியொக்களினதும் விளைவே.

தனிமனித பற்றும் சுயநலமும் தன் திருப்திக்காய் ஏதும் செய்யலாம் எனும் போக்கும் சிறுவயதில் இருந்தே உட்புகுத்தபட்டதாய் உள்ளதால், மேற்கத்தைய நாடுகளில் நடைமுறைகளோ கட்டுப்பாடுகளோ அற்று சீரழிந்து போகும் குடும்பங்களும் சமூக வாழ்வியலும் இன்றைய நிதர்சனம்.

இதன் விளவுகளாய் பெண்கள் மீதான மரியாதை அற்றவர்களாய் ஆண்களும், தாம் தவறான வழியில் நடத்த படுகிறோம் என்பதை உணராத பெண்களுமாய் நிறைகிறது மேற்குலகம்.

சகமனிதர்கள் மீதான நேசமும், சமூக பற்றும் அற்றவராய் உருவாகியுள்ள மக்கள் கூட்டம், கொள்முதலுக்காய் தினம் தினம் உருவாக்கபடும் கவர்ச்சி பொருட்களை நுகரும் பிராணிகளாக பெரும்செல்வந்தர்களின் வங்கிக்கணக்கை நிரப்பும் கடமை ஒன்றையே கொண்ட நவஉலகின் அடிமைகளாய் போயினர்.

இந்கு எவரும் எவருக்கும் நல்லதை போதிப்பவராகவோ,சிறந்தவற்றை ஊக்கிவிப்பதற்கான மனப்போக்குகளோ அற்றவராயே உள்ளனர்.

இந்நிலையில் தனிமனிதர் ஒவ்வொருவருமே தன் பாதுகாப்பை பற்றி சிந்திக்கவேண்டும்.

நான்கு பக்கமும் சுவரை கொண்ட பாதுகாப்பான வீட்டில் வாழும் நாம்,பரந்த வெளியை கொண்ட எவராலும் இலகுவில் நுளையக்கூடிய இணையத்தில்  எம்மை எவ்வாறு தற்காத்துகொள்கிறோம்!

மானிடத்தை முன்னோக்கி நகர்த்தி கொண்டிருக்கும் இளையதலைமுறையை எவ்வாறு இணையத்தில் பாதுகாத்துக்கொள்கிறோம்!

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on September 18, 2013 by in கிறுக்கல்கள், விசனம் and tagged , , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: