Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

டென்மார்க் கரிசனை


டென்மார்க்கின் ஆளும் சோசலிச கட்சியினதும் மற்றும் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினதும் ஏற்பாட்டில்  மறக்கப்பட்ட மோதுகை (The Forgotten Conflict) என்ற தொனிப்பொருளில் இலங்கைத் தீவில் மனித உரிமை என்ற மாநாடு இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.SONY DSC

ஆளும் சோசலிச கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொல்ஸ் ராவுன் (Troels Ravn) அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகி, இன்று காலை டென்மார்க் நேரம் 10 மணி தொடக்கம் மதியம் 1:30 மணிவரை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பேச்சாளர்களாக பங்குபற்றிய டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச சுயாதீனமான விசாரணையை ஒருமித்த குரலில் வலியுறுத்தினார்கள். இதற்காக டென்மார்க் தன்னாலான சகலவழிகளிலும் முயற்சிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

நாடாளுமன்ற சபாநாயகரும் முன்னை நாள் வெளியுறவு அமைச்சருமான, மோகென்ஸ் லைக்ரொப்ற் (Mogens Lykketoft) அவர்கள்,  இலங்கை இனப்பிரச்சனையில் சர்வதேச கண்ணோட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.SONY DSC

இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், தமிழர் தாயகத்தை முற்றுமுழுதாக அழித்தொழிக்கும் நோக்கோடு சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக மாநாட்டில் கலந்துகொண்டோருக்கு எடுத்து விளக்கினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on April 17, 2013 by in புலம் and tagged .
April 2013
M T W T F S S
« Mar   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: