Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

பிரான்ஸ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்


அன்பார்ந்த தமிழ் உறவுகளே!maison du tamil eelam

சிறிலங்கா அரசுக்கு எதிரான தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டம் தமிழகத்தையே உலுப்பிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அயல் மாநிலங்களையும் ஏன் இந்திய அளவில் கூட இந்த மாணவர்கள் போராட்டம் பற்றிக்கொள்ளத்தொடங்கியிருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப்போராட்டததையும் தமிழினவழிப்புப்போரில் சேர்த்துப் புதைத்துவிட்டதாக மார்புதட்டி இறுமாப்போடு சொன்ன சிங்கள பேரினவாத அரசு தமிழகமாணவர்களின் போராட்டம் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. சிங்கள அரசுக்குத்துணை நின்ற இந்திய அரசு அதிதீவிரம் பெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தை கலக்கத்தோடு கவனித்துவருகிறது.

ஒவ்வொரு நாளும் தொடர் உண்ணா மறுப்புப் போராட்டத்தில் தங்கள் உடலை வருத்திக்கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினரின் அடி உதைகளைத் தாங்கிகொண்டும் இரவுபகலாய் ஆண்,பெண் வேறுபாடுகளின்றி அத்தனை மாணவர்களும்  ஒற்றுமையாய் போராட்டக்களத்தில் குதித்து ஓர் உன்னத வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் வரலாறு மீண்டும் திரும்புகறிது என்று உலகமே வாய்பிழந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு தமிழினவழிப்புப்போரைத் தடுத்திட நாம் புலத்தில் நிகழ்த்திய போராட்டங்களுக்கு ஒப்பானதாய் அல்லது அதற்க்கு மேலானதாய் தங்கள் கல்வியைப் புறக்கணித்து தொடர் உண்ணா மறுப்புப்போராட்டம் சாலைமறியல் போராட்டம் என தங்கள் உயிரைக்கொடுத்து மாணவர்கள் போராடுகின்றார்கள்.

ஒரு கோடி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டக்களத்தை விரிவுபடுத்தும் முயற்ச்சியில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். எங்களுக்காக எங்கள் உரிமைகளக்காக எங்கள் தேசத்தின் விடுதலைக்காக அறப்போராட்டக்களத்தில் வீரம்செறிந்த போராட்டத்தை நடத்தும் மாணவர்களின் கரங்களை வலுப்படுத்துவது நம் கடமை அல்லவா? நாம் அனைவரும் அதனை செய்தே ஆகவேண்டும். சர்வதேசம் விழித்துக்கொள்ளத் தொடங்கியுள்ளபோது. நாம் இனி உறங்கக் கூடாது! புலம்பெயர் தமிழர்கள் போராட்டக்களத்தில் குதித்தேயாகவேண்டும்! வரலாறு அடிக்கடி வாய்ப்புக்களை நமக்குத் தருவதில்லை! இது தான் சரியான தருணம் அதையுணர்ந்து நாம் களமிறங்குவோம்.

ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை சமகாலத்தில் அறப்போராட்டக்களத்தில் குதிக்க நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

-தமிழிழ   மக்கள்   பேரவை பிரான்ஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 18, 2013 by in புலம் and tagged , .
March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: