Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

பாதுகாப்பற்ற டாக்சி தொழில்


வழமைபோல் கடந்த புதன்கிழமை மொகமட் சுரூர் தனது டாக்சியை எடுத்துகொண்டு ரொரொன்ரோ நகர் மையத்தை நோக்கி உழைப்பு தேடி செல்லும் போது ‘ அல்லா இன்று எனக்கு தேவையான வருமானம் தா” என்றுமட்டும்தான் பிரார்த்திருப்பான் வரப்போகும் அபாயம் தெரியாமல்.

56 வயதுடைய மொகமட் கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் யெரார்ட் வீதியில் யோன்ஸ் ஒழுங்கையருகில் ஏற்றிய ஒரு பயணியை  மேற்கு லேக்சோர் பகுதிக்கு அழைத்துசென்றுள்ளார்.பயணமுடிவில் பணத்தை கொடுத்துவிட்டு போகவேண்டிய பயணி கத்தியொன்றை எடுத்து சரமாரியாக தலையின் பின் புறமாக தாக்க மொகமட்டுக்கு வாகனத்தைவிட்டு ஓடுவதை தவிர தெரிவு வேறெதுவும் இருக்கவில்லை.இரத்தம் ஒழுக ஒழுக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியை நோக்கி ஒடியவரை வைத்தியசாலை கொண்டுசென்றுள்ளார்கள்.இது நடந்து சற்றுநேரத்தில் பொலிசாரால் குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார்.taxi

இப்பொழுது நலம்பெற்றுவரும் மொகமட் விரைவில் வேலைக்கு தான் திரும்ப போகவதாகவும் ஆபத்தான தொழிலெனினும் தன் குடும்பத்தை பராமரிப்பதற்கு தனக்கு வேறு வழிகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்ணனியில் அமெரிக்காவில் உள்ளது போல் வாகனத்தின் முன் இருக்கைக்கும் பின் இருக்கைக்கும் இடையில் கண்ணாடி தடுப்புசுவர் அமைக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 15, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
March 2013
M T W T F S S
« Feb   Apr »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: