Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

கூகோ சாவேஸ் மரணம் அடைந்தார்


உலகின் நன்கு அறியப்பட்ட சோசலிச தலைவர்களில் ஒருவரான ‘கூகோ சாவேஸ்’  மரணமடைந்தார்.

தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த இhugo chavezவர், கடந்த ஒக்ரோபரில் மீண்டும் அதிபராக தெரிசெய்யப்பட்டவர்.கடந்த இரண்டு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கபட்டு கியுபாவில் சிகிச்சை பெற்றுவந்த சாவேஸ் பல லட்சம் மக்களின் இதயங்களில் இடியாய் அதிர்ச்சியை கொடுத்துவிட்டு சாவை அணைத்துகொண்டார்.

பாரிய எண்ணெய் வளம் கொண்ட பிராந்திய வல்லரசான வெனிசுலாவின் மதிக்கபட்ட பெரும் தலைவர் இவர்.

இடதுசாரி கொள்கைகளுடைய இவர் வெனிசுலா நாட்டின் வறுமையை ஒழிக்க பெரிதும்பாடுபட்டவர். எண்ணெய்வளத்தினால் ஈட்டிய வருமானத்தை கொண்டு பெருமளவிலான சமூக நலத்திட்டங்களை உருவாக்கி கீழ்மட்ட மக்களின் வாழ்வை மாற்றியவர்.

அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிரானவர் என தன்னை அடையாளப்படுத்திய சாவேஸ் கியூபா ,ரஸ்யா,ஈரான் ,சிரியா போன்ற நாடுகளுடன் வலுவான உறவை பேணிவந்தார். லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார சமூக அரசியல் ஆரோக்கியத்தை நோக்கியதாக வெனிசுலாவின் கொள்கைகளை மாற்றியமைத்தார்.தனது நாட்டின் எண்ணெய் வளம், வல்லாதிக்க அமெரிக்காவிற்கெதிரான ராஜதந்திர பலம் என அடையாளப்படுத்திய சாவேஸ் 2002 ல் தனக்கெதிராய் நடந்த சதிவேலைக்கு காரணமாய் அமெரிக்காவை குற்றம்சாட்டியிருந்தார்.

chavez

ஒபாமா அமெரிக்க அதிபராய் தேர்ந்தெடுக்கபட்ட பொழுது நம்பிக்கையும் வாழ்த்துகளும் தெரிவித்த சாவேஸ், இலத்தீன் அமெரிக்கா அமெரிக்க அரசினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைக்கும் நூல் ஒன்றை ஒபாமாவிற்கு அளித்தது மிகவும் வேடிக்கையாய் இருந்தது.

புற்றுநோயால் இறந்து போன கூகோ சாவேஸ், பிராந்திய தலைவர்களை கொல்ல அமெரிக்கா புற்றுநோய் கிருமிகளை பரப்பகூடும் என சில வருடங்களுக்கு முன்னர் சந்தேகம் வெளியிட்டிருந்தது குறிப்பிடவேண்டியது.

ஒரு புறம் சிறந்த தலைவராய் போற்றபடும் சாவேஸ் இன்னொரு புறம் எதேச்சாதிகாரி எனவும் கொடுமையான ஆட்சியாளனெவும் குற்றம்சாட்டப்பட்டார்.எவ்வாறெயினும் தென்அமெரிக்கா எங்கினும் இவரது மரணம் பலத்த அதிர்வலைகளையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 5, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: