Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

தவறுகளை திருத்தலாமா!முஸ்லீம் விழிப்பு குழு


லண்டன் தெருக்களில் மக்களை திருத்த முற்படும் முஸ்லீம் விழிப்புகுழுக்கள் இரவு வேளைகளில் ரோந்து வருவது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.london

அண்மைக்காலங்களில் லண்டனின் முஸ்லீமக்கள் வாழும் பகுதிகளில்,வீதிகளில் உலாவரும் ‘முஸ்லீம் விழிப்புகுழுக்கள்’ எனதம்மை அழைத்துகொள்பவர்கள் இஸ்லாமிய விதிகளை மக்களின் மீது அமுலாக்கமுனைந்துவருகின்றார்கள்.

இவர்கள் வீதியில் செல்பவர்களை அச்சுறுத்துவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் தோன்றியுள்ளது.

மது அருந்துவது, முறையற்றவகையில் ஆடையணிவது, விபச்சாரம் போன்றன சமூகத்தின் நல்வாழ்விற்கு உகந்ததல்ல என கூறும் இவர்கள் அதனை தாம் வாழும் லண்டனின் பகுதிகளில் உள்ள மக்களிடம் திணிக்கமுயல்வது பலத்த வாத பிரதிவாதங்களை உண்டாக்கியுள்ளது.

லண்டன் முஸ்லீம் மக்களில் பெரும் பகுதியினர் இக்குழுக்களின் அச்சுறுத்தும்வகையிலான நடவடிக்கைகளை பலமாக கண்டித்துள்ளார்கள்.குர்ரான் கூறும் நல்வழிகளை பின்பற்றுவது ஒருவரின் வாழ்விற்கு உகந்தது என கூறும் இவர்கள் அதை மற்றவர் மீது திணிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை மதிக்கும் தமது நாட்டில் இவ்வாறு இவர்கள் நடப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என இங்கிலாந்து மக்கள் விசனமடைந்துள்ளார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on February 28, 2013 by in எம்மை சுற்றி and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: