Asian Athlectics Championship வெகுவிரைவில் நடக்க இருக்கும் நிலையில், அந்த நிகழ்வின் எந்த பகுதியும் தமிழ்நாட்டில் நடைபெற தடை என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Asian Athletics Association க்கு அவர் எழுதிய கடிதத்தில் இலங்கை அரசின் தமிழின படுகொலையை கண்டித்து இலங்கை அணியை இதில் இருந்து விலத்துமாறு கேட்டிருந்தார்,அதற்கு சாதகமான பதில் அவர்களிடம் இருந்து வராததால் இந்த முடிவை தான் எடுத்ததாக அறிவித்துள்ளார்.
பாலச்சந்திரன் பிரபாகரனின் படங்கள் Channel 4 னால் வெளியிடப்பட்டபொழுது,இலங்கை அரசின் செயல்கள் நாசிகளின் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் போல் இருப்பதாக முதலமைச்சர் முன்னதாக அறிவித்திருந்தார்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி