ரொரன்ரோவில் வீசும் கடும் பனிப்புயலுக்கும் மத்தியில் இசையானியின் இசைமழை சற்றுமுன்னே ஆரம்பமாகியது.
கடுமையாய் வீசும் பனிப்புயலால் நகரின் பல பகுதியிலும் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
மோசமான காலநிலைக்கு மத்தியிலும் எம்மவர்கள் இசையானியின் இசைமழைக்காய் திரண்டுள்ளார்கள்.
பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இளையராயாவின் எங்கேயும் எப்போதும் இசை நிகழ்வு மக்கள் வெள்ளமாய் காட்சிதரும்Toronto Rogers Centerல் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
ரொரன்ரோ நகரின் மத்திய பகுதிக்கு செல்லும் பெருந்தெரு ஒரு புறம் பைனிப்புயலாலும் மறுபுறம் தமிழர்களின் வாகனங்களாலும் நிறைந்து காணப்படுகின்றது.
தமிழ்நாட்டில் தான் வாழ்ந்திருந்தாலும் இளையராயாவின் நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தில்லை என கூறும் Madrasஐ சேர்ந்த சேகர் ரொரன்ரொவில் இருந்து 400km தொலைவில் உள்ள ஒட்டாவா நகரில் இருந்து வந்துள்ளார் இந்நிகழ்வை காண.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி