Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

வட இந்தியாவின் ஏதேச்சியதிகாரம்


பிரச்சனை வேறொன்றாக இருக்க, நதிகளை தேசியமயமாக்கவேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கவேண்டும் ,நீர் தராவிடில் மின்சாரம் மறுக்கபடவேண்டும் என்பன போன்ற அபத்தவாதங்களை நிறுத்துவதே தென்னகத்திற்கு ஆரோக்கியமானது.

water crisisஏற்கனவே இந்திய அரசியலமைப்பின்படி மத்திய அரசின் ஆளுகைக்குள்தான் நதிகள் உட்படுகின்றன.ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான நீரை சுலபமாக மத்தியஅரசு பங்கீடுசெய்திடமுடியும்.ஆனால் இதை மாநில அரசின் ஆளுகைக்குள் உட்பட்ட விடயம் போன்ற தோற்றபாட்டை உண்டாக்குவதன் மூலம் தென்னக அரசுகளுக்கிடையே பிளவையும் பிரச்சினைகளையும் தொடர்ச்சியாக இருக்க அனுமதித்து அவர்கள் மீதான தனது ஆதிக்கத்தை உறுதிசெய்துகொள்கிறது வடக்கு.

நீர் தடுக்கபடுவதும் பதிலுக்கு மின்சாரத்தை தரமாட்டோம் என்பது வடக்கு செய்யநினைப்பதை மேலும் இலகுவாக்கும்.

இராணுவத்திடம் கொடுப்பதிற்கு இதில் புதிதாக ஏதும் இல்லை.ஏற்கனவே இராணுவம் மத்திய அரசின் ஓர் அலகே.மத்திய அரசின் நிர்வாகசெயற்பாடுகளுக்கு தடையாக ஏதாவது பிரச்சினைகள் எழுந்து அதை கையாள்வதறகு பாதுகாப்பு பிரிவுகள்தான் தேவையெனின் அதை மத்தியஅரசு பயன்படுத்தும் விதிமுறை எல்லாதரப்பும் அறிந்தவையே, இப்போது நிர்வாகத்தை இராணுவத்திடம் கொடுக்கவேண்டும் என்பதல்ல பிரச்சினை.

பதிலுக்கு பிரச்சினை என்னவென்றால் இராணுவத்தின் மீது அதிகாரம் கொண்ட மத்திய அரசு தான் ஆற்றவேண்டிய தேசிய கடமையொன்றை, பொறுப்பொன்றை அலட்சியப்படுத்துவதன் மூலம் தென்னக அரசுகளுக்கிடையே பூசலையும் பிளவையும் பேணமுயல்கின்றது என்ற உண்மையே.

world water crisis

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: