நாடு அற்றவர்களாக்கபட்டு உரிமைகள் பறிக்கபட்டு அடக்குமுறைக்கும் இன அழிப்புக்கும் உள்ளாகும் தன் இனத்தின் விடுதலைக்காக தம் வாழ்வின் சுகங்களை மட்டுமல்லாது தன் உயிரையும் துச்சமாக துறந்தது தமிழ் இளைய சமுதாயம்.
இவர்களுக்கான வணக்கத்தை தெரிவிப்பதும் அஞ்சலி செலுத்துவதும் ஒவ்வொரு தமிழனினதும் ஒதுக்கமுடியாத கடமை.
உலகம் பார்க்க முள்ளிவாய்க்காளில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட பின்னரும் இக்கடமையை ஆற்ற யாழ் மாணவ சமுதாயம் துணிந்தது மயிர்கூச்செறியவைக்கும் செயல்.
இவர்கள் சிங்கள படைகளால் தாக்கப்பட்டது ஈழத்தின் இன்றைய யதார்த்தம்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி