Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

நம்பவிரும்புகிறோமா


21ம் நூற்றாண்டு ,எமது அடங்காத ஆசைகளையும் மீறிய பலவற்றை பரிசாக தந்தது.

இன்று பல நவீன முறைகளில்,உலகின் எம்மூலைக்கும் அதிவிரைவாக சென்றுவிடுகிறோம்.நவீன மருத்துவத்தின் உபயம் ,நீண்ட காலம் வாழ்கிறோம் உன்னதமான வாழ்வை கொண்டிருக்கிறோம்.

எல்லாம் இருப்பவர்க்கு 21ம் நூற்றாண்டில் வாழ்வென்பது அதிசயத்தக்கதாக அமைந்துள்ளது. வறியவர்களுக்கோ வாழ்வு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. வறியவர்களின் நம்பிக்கையீனங்கள் புரட்சிகள் வசதியானவர்களுக்கு ஒரு தலையிடி.

ஆனாலும் வாழ்வு மிகவும் நம்பிக்கை அளிப்பதாகவே பொதுவில் உள்ளது.

21ம் நூற்றாண்டு பலவற்றை அள்ளித்தந்துள்ளது. பல நவீன துறைகளும், அதனூடாக சிறந்த வேலைவாய்ப்புக்களும் என செல்வசிறப்புடனேயே வாழ்கிறோம்.

என்றுமே வற்றாத பொருற்களஞ்சியத்துடன் மினுமினுப்பும் கதகதப்பும் குறைவில்லாத கூட்டு அங்காடிகள். நாவின் உணர்வு மொட்டுக்களை சிலிர்க்கவைக்கும் நவீன உணவகங்கள். நண்பர்களுடன் இனிய பொழுதுகள் இல்லாவிடில் தனிமையெனும் இனிமை, அன்றாட வாழ்வின் அழுத்தங்களை போக்க நீலநெடுங் கடல்கரையில் சுகபோக விடுமுறைகள்.

இவ்வாறு எல்லாமே சுகமாக இருக்க, ”உலகம் அழிவை எதிர்நோக்குகின்றது” என்ற செய்தி யாருக்கு வேண்டும்.அடுத்து அது உண்மையெனில் , எல்லா செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பாகியிருக்கும் என்ற அப்பாவித்தனம்.

எமது கண்கள் பொய்சொல்கின்றனவா!…………

எமது சூரிய உடும்பத்தை சேர்ந்த , மிகவும் நீண்ட வட்டபாதையில், 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூமியை நெருங்கும், ஓர் ‘அழிவும் ஆக்கமும்” உண்டாக்கும் கிரகம் -இப்போது எம்மை நெருங்கி கொண்டிருப்பது பொய்யாகுமா!…..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on May 4, 2012 by in எம்மை சுற்றி and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: