மாதங்கி,ஈழத்தமிழர்களான அருட்பிரகாசம்,கலா தம்பதியருக்கு லண்டனில் பிறந்தவர்.ஈழத்தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் தன் சிறுபராயத்தை கழித்த மாதங்கி,லண்டனில் வளர்ந்திருந்தாலும் வெகுவாக தமிழை பிரதிபலிக்கின்றார்.
இவரது தந்தை ரசிய பல்கலைகழகத்தில் பொறியியல் கற்றவர்,ஈழபுரட்சிகர மாணவர் இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்,தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால நண்பர்.பொருளாதார(முதலாளித்துவ)நலன்களை மட்டுமே முன்நிறுத்தி குப்பைகளால் நிரப்பபட்ட மேற்கத்தைய வாழ்க்கை முறைக்குள்,தெளிந்தசிந்தனையுடன் குறுக்கு வழிநாடாது தன்திறமையில் மட்டும் நம்பிக்கை கொண்டு வழையாமை கைக்கொண்டு சிகரத்தில் நிற்கும் மாதங்கியை பெற்று வளர்த்த தாயார்(கலா)பெருமைக்கும் சிறப்பிற்கும் உரியவர்.
மாசு படாத பாடல்களை மட்டுமே வெளியிட விருப்புள்ள மாயா(M.I.A)பல வித அழுத்தங்களை முகம் கொடுத்து வெற்றிகண்டவர்.தமிழர் இனஅழிப்புக்கு எதிராக தன் இசைத்திறமையை வெகுவாக பயன்படுத்திவருகிறார்.
மேற்கத்தைய நாடுகளில் வாழும் எம் இன்றைய தலைமுறை பெண்கள் இவரிடம் கற்றுகொள்ள ஏராளம் உள.
ஏராளமான விமர்சனங்களுக்கு உள்ளாகின்ற இவர், எவ்வாறாகினும் பல பிரமிப்புக்களை உண்டாக்கியவரே. தமிழர்க்கெதிரான இனவழிப்பு போர் விரித்த காலஓட்டத்தில் ஆங்காங்கே மிளிரும் நட்சத்திரங்களில் ஒன்று M.I.A
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி