ஒரு சில மணித்தியாலத்திற்கு முன் பூமி சுழல்வதை நிறுத்தி ஒரு கோடி கண்ணீர் துளி சிந்தி நகர்ந்தது.
அறிவார்ந்த மூளை ஒன்று இயக்கம் நிறுத்தி
தொழில்நுட்பம் துயருற்றது.
உலகம் கண்டது எத்தனையோ புரட்சிகள்
தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திய வழி
இளம் சமுதாயத்தின் கைகளில் உலக அரசியல்
உபயகாரர்களில் ஒருவர் Steve Jobs.
காதலில் கிறங்கி கிடந்தது பெருங்கூட்டம்
இவன் கனவுகள்
இலத்திரன்களோடு.
21 வயதிலேயே இவனுள்
இமயம் தொடும் ஆசை,இன்று
விண்முட்டும் பலர் வெற்றிக்கு
இவன்தான் பாதை.
தொழில்நுட்ப புரட்ச்சியில்
ஒரு தீப்பொறி இவன்
Silicon Valley ன் சூரியக்கடவுள்.
ஆன்மீக பூமியில் மொட்டை அடித்த
இவன் படைப்புகள் பல
அரசியல்வாதிகலுக்கு மொட்டை அடிக்குது.
iMac,iPad,iPhone,iPodஇவன் பாதையின் வெற்றிக்கற்கள்.
சிரிய இரத்தத்தில் உதித்த இவன்
படைப்புகள்,நாளைய சிரியாவின் உதயத்திற்கு காரணம் கூட
கீழத்தேய தத்துவத்தில் பற்றுக்கொண்ட இவன் மனம்
காயமே இது பொய்யட காற்றடைத்த பையடா
வாழ்விற்குள் போராடு ,சாவதற்குள் வென்றிடு என்றிற்று.
Steve Jobs ஒரு சரித்திரம்,
சாவினை வெற்றிகொண்ட ஒரு வாழ்வு
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி