யூதர்களின் இன்னும் ஓர் passover தினம் வழமைபோல் இவ்வருடமும் இங்கே,அடிமை வாழ்வில் இருந்து விடுதலை வேண்டிய நாள்.3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியரிடம் இருந்து விடுதலையானதை தாளாத மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்னுமொரு நாள்.சூழ்ந்திருந்த முள் வளையமெல்லாம் அறுத்துக்கொண்டு வெளியோடிய நாள், தமெக்கென ஓர் தேசம் உண்டென்று விழ விழ ஓடிய நாள்.தமக்கான தேசம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்றே தெரியாமல்,ஊண் இன்றி உறக்கமின்றி உடைத்துக்கொண்டு ஓடிய நாள்.
நீண்ட நெடிய பெருமூச்சாய் எனக்குள்ளே ஓர் ஏக்கம்,நான் என்று விடுதலையாவேன்!….
இந்த அடிமைவாழ்வு பெரும் சுமையாய் அழுத்துகிறது,என்னால் முடியவில்லை. நான் என்று விடுதலையாவேன்! … ..
யன்னலூடாய் முகம் அறையும் இருள் பிளந்த நிலாக்கற்றைகள், என் கண்பார்த்து கதைசொல்லும்… .. .
மீள முடியா நெடுவெளியில் இழுபட்டுசெல்லும் என்னை ,கை நீட்டி இடைமறித்து காதோடு கதை சொல்லும்… .. .
புயலாய் வீசுது என் முதல் மூச்சு.
வெறித்த பார்வையில் தெறித்து விழும் ஒவ்வொன்றாய் சிந்தனைகள்….. …. … .. .
வலித்துத்தான் வெளியேறும் ஒவ்வொரு மூச்சும்.
என்னை தனியேவிட்டு தான் மட்டும் வெளியேறும் உறுத்தல்.
மெது மெதுவாய் வெளியேறும் மறுமூச்சுக்கள்
தலை குனிந்து வழியனுப்பும் என்நெஞ்சம்……… ……. …… …. … .. .
வலிக்கும், பின் இன்னும் வலிக்கும்,இன்னும் இன்னும் வலிக்கும்.
சிந்திக்க சிந்திக்க வலிக்கும்.
கெஞ்சினால் இன்னும் இன்னும் வதைக்கும்… .. .
என்று விடுதலையாவேன்!
தான் செய்த தவறுகளின் சுமையெல்லாம் என் மேல் சுமத்திவிட்டு-சனியன்
சாதாரணமாய் திரியுது…. … .. .
எங்கும் காயங்கள்,இரத்தம் சொட்ட சனியன் சாதாரனமாய் திரியுது.
வலியெல்லாம் எனக்கு.
என்று விடுதலையாவேன்,உடலெனும் சிறையுடைத்து
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி