எல்லாமே நன்றாகவே இருந்தது.வரிக்கு வரி அழகாய் அமைந்த வீடுகள்,நேர்த்தியான வீதிகள்,தெருவுக்கு தெரு -வீட்டுக்கு வீடு நிறைந்திருந்த நெடுமரங்கள் பூஞ்சோலைகள்.வீடு தேடிவருபவர்கள் சிங்களவராக இருந்தாலும் வாசல் ஓவென்றே திறந்து இருந்தது,இருத்தி வைத்து மனம் குளிர விருந்து வைத்தது.ஆனால்,இட்லி,வடை,தோசை என பெயரிட்டு அழைத்து தேடி தேடி அடித்தார்கள்.எம் குலத்தின் மாசற்ற விளக்குகள் மீது துரத்தி துரத்தி தம் இச்சைகளை கொட்டினார்கள்.நீ வெள்ளையனோடு காந்தீயம் பேசினாய்,நாம் பேசமுன்பே சிங்களவன் குரல்வளை அறுத்தான் அய்யா.என்ன பேசுவாய் ,இல்லை என்ன பேச முடியும் தடியுடன் நிற்பவனுடன்.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி
வலி மிகுந்த வரிகள்…உணர்வைப் பிழிகின்றன..