பசும்புல்லும் பால்நிலவும்,பரிசுத்தமான உன் நினைவுகளும்
பக்கத்தே உன் சுவாசமும் இருந்துவிட்டால்…………………
தமிழகமே! உன்னால் மட்டுமே ஈழம் வாழும்
யாரைக்கேட்டு பிறந்தோம்,யாருக்காக பிறந்தோம்
பாவப்பட்ட மனிதர்களிடையே உன்னிடம் மட்டுமே மன்றாடமுடியும்
அவர்களால் முடியாதது ,உன்னால் மட்டுமே முடியும்.
இன்னும் எத்தனை நாட்கள் தான் அண்ணா வருவான் ,அண்ணா வருவான் என மீதமிருக்கும் உயிரை மட்டும் கொண்டு வாழ்வது.எல்லாமே போய்விட்டதா!
சிந்தனையில் கற்பைக்காத்து சிதைந்த உடலைக்கொண்டு அலைகின்றேன் ஏன்! நான் ஈழத்தவள்.
கனவில் எழுதி கலைந்துபோன கதையா நான்!
கனவா! இல்லை ஒரு தவறா!
சிரிக்கமறத்து சிதறிப்போன அண்ணாக்களும் அக்காக்களும் எதற்காக எமைபிரிந்தார்!
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி
வருத்தம் நெஞ்சில் வலிக்கிறது!