நீ பிறவி எடுத்து வாழ்வதற்கும்,உனது உயிர் இருப்பிற்கும் உள்ளார்ந்த படைப்பியல் காரணம் ஒன்று இருக்கின்றது.உனது படைப்பு நன்மை பயப்பது! நல்லவனாக வாழ்வதற்குத்தான் நீ படைக்கபட்டிருக்கிறாய்.நீ இப்பொழுதும் நல்லவனாகதான் வாழ்கிறாய்,உடன் பிறந்த தீய இயல்புகள் ஒன்றுமே உனக்குள் இல்லை.ஏதோ ஒரு காரணத்திற்காகவே நீ படைக்கபட்டிருக்கிறாய்..நீ அடைய வேண்டிய குறிக்கோளை திட்டவட்டமாய் உன்னால் மட்டுமே நிறைவேற்றமுடியும்.அந்த குறிக்கோளை அடைவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய்.வேறொருவருக்கும் இல்லாத திறமைகள் உனக்குள் கொண்டுள்ளாய் அதற்கான ஆசீர்வாதம் உனக்கு என்றும் உண்டு.உனது குறிக்கோளை முற்றுமுழுதாய் புரிந்துகொள்வதற்கான ஆதாரமாகவே உனது ஒவ்வொரு அனுபவமும் அமைகிறது.நீ பூரணமாக புரிந்து பயணிக்கவேண்டிய பாதையை எளிதாக்குவதற்காகவே உன் வாழ்வில் குறுக்கிடும் ஒவ்வொருவரையும் நீ சந்திக்கிறாய்.
ஆனால் உலகின் மாயை பாதிப்பினால் உனது உள்ளார்ந்த சுயத்தையும், உண்மை குறிக்கோளையும் மறந்து வழி தடுமாறி தத்தளிக்கின்றாய்.உண்மையில் நீ தகுதி வாய்ந்தவன்,ஆனபடியால் உனது குறிக்கோளை அடைய எப்படி வாழவேண்டும் என்பதை நீ தேர்ந்தெடுத்து உனக்கு உதவி வரும்வெற்றிபாதையில் மீண்டும் பயணித்திட ஒத்தாசையும் வழிகாட்டலும் நிச்சயம் கிடைக்கும்.எந்தநேரத்திலும்,தயக்கமின்றி உனது இலக்கை அடைவதற்கு அத்தியாவசியமான தேர்வுகளை நீ செய்.உனது இதயத்தையும் மனதையும் சரிசமனாக்கி சீர்செய்வது தான் உனது வாழ்வின் நோக்கான இலக்கை அடைவதற்கான திறவுகோல்.
அனுபவம் ஒவ்வொன்றும் எவ்வாறு உனது குறிக்கோளை அனுசரித்து நடக்கின்றன என்று இயற்கையிடம் இருந்து அறிந்துகொள்.வாழ்வின் நியதியாய் படைத்தவன் செயல்முறை விரியும்,அதில் இருந்து உன் பதில்களை பெற்றுக்கொள்.
இயற்கையின் வழிநடத்தலுடன் உனது குறிக்கோளை அடைந்திட நீ செய்யவேண்டிய அனைத்தையும் இன்று சரி பார்த்துகொள்.
நன்றி; லலிதா புருடி அம்மையார்
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி