Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

மானிடம் உயர்ந்ததா-நாம் யார்


மானிடம் உயர்ந்ததா

எமக்காகவே எல்லாம் என்ற சிந்தனை எவ்வாறு எம்மிடம் வந்தது.இருப்பவை எல்லாம் இருப்புக்கான அர்த்தத்துடன் அழகாய் அமைந்திருக்கின்றன,அப்படியே இருந்தும் கொள்கின்றன.நாம் மட்டும்,இருப்பவை எல்லாவற்றினதும் இயல்புகளை எமக்கேற்றபடி மாற்றிக்கொள்கிறோம் அழித்தும்கொள்கிறோம்.ஏன்!மனிதர்களாகயால்,எமக்கு எல்லாவற்றிலும் இருக்கும் மேலாண்மையா.தான் அமர்ந்திருக்கும் மரகிளையை வெட்டும் முட்டாள்,மனிதனாக மட்டுமே இருக்க முடியும்.வேறெந்த உயிரினமும் இவ்வளவுக்கு இயல்பு மீறியதன்மையை கொண்டிருக்கவில்லை.ஊண்,உறக்கம்,இனவிருத்தி என்று மட்டுமே எல்லா உயிரினமும் இருந்துவிட,மனிதம் மட்டும் அற்புதமாய் இருந்தது.அழகை ரசித்தது,தன் துணையயை காதலித்தது,அன்பை பிரசவித்தது.அன்பே நீ என் தோளில் சாய கண்ணை மூடி,உலகை மறந்து இப்படியே இறந்துவிடுவோமா என்றது.ஈரய்ந்து காலம் சுமந்து,உன் யுகமெல்லாம் எனை நிறைத்து,பெற்றவளே!அக்கணமெல்லாம் ஊணுறக்கம் இழந்தாயா.என நெஞ்சுருகி நின்றது,தென்றலின் வருடலில் திளைத்தது,நதியோரம் குளிர்ந்திருந்தது,மழலையின் சிரிப்பில் சுவாசிக்கவே மறந்தது.இன்று என்னதான் நடந்தது!

மனிதத்தை கொன்றுவிட்டு வேறொன்றாய் உருப்பெருத்தோமா!இல்லை
மனிதத்தை புதைத்துவிட்டு வேறொன்று எமக்குள் குடிபெயர்ந்ததா!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 19, 2011 by in கிறுக்கல்கள் and tagged , .
Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: