இதுவும் ஒர் சிறுகதையே.
16.08.96
வவுனியா
அன்பின் தம்பி அறிவது
நலம்,நாடுவதும் அஃதே.நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து விட்டோம்.தனிய இருக்க விசரா இருக்கிறது.நாள் முழுக்க அறைக்குள் இருந்து எனக்கு விசர் பிடிக்க போகிறது.வவுனியாவில் ஓரிடமும் தெரியாது,போகவும் பிடிக்கவில்லை.துணுக்காய் போக விருப்பமாக இருக்கிறது.அங்கு எவ்வளவு பிரச்சனைகள் என்றாலும் எல்லாருடனும் சேர்ந்திருப்பது ஆறுதலான விடயம் தானே.நேற்று பெரியப்பா துனுக்காயில் இருந்து வந்திருந்தார் அங்கு ஒரு பிரச்சினையும் இல்லையாம்.விமானத்தாக்குதல் அங்கு இல்லையாம்.எல்லோரும் சுகமாய் இருக்கினமாம்.சின்னவன் நன்றாய் படிப்பதாகவும் o/l exam க்கு முன் அம்மாவை விரைவாக வரும்படியும் எழுதியிருந்தான்.பெரியக்கா ஆர்த்திகுட்டியின் negetive அனுப்பியிருக்கிறா உங்கே develope பண்ணலாம்தானே.இங்குdevelope பண்ண ஏலாது என்று சொல்கிறார்கள்.நீர் develope பண்ணி எங்களுக்கும் அனுப்பிவிடும்.
வேறு என்னடா மாமான்ரை மூத்தவன் எப்படி இருக்கிறான்.அவன் அன்ரியுடன் தானே இருக்கிறான்.school போகிறானா.நீ படிக்க முடியவில்லை என்று கவலைப்படாதே.இங்கு மாதிரி இல்லை தானே உங்கே படிக்கும் system இடையில் விட்டாலும் பிறகு படிக்கலாம் தானே.
நான் உங்கே வந்த பிறகு நீ தொடர்ந்து படி,நான் வீட்டு பொறுப்பை பார்க்கிறேன். பெரியக்கா எழுதியிருந்தா ,நான் கனடா போன பின் உன்னை கட்டாயம் படிக்க வைக்கசொல்லி .வேறு என்ன பதில் போடவும்.
இப்படிக்கு சின்னக்கா.
நான் கனடாவில் சிறு பையனாய் ,என் குடும்பம் இலங்கையில்.காலம் எவ்வளவு கொடியது ,அழகழாய் போட்ட கோலம் எல்லாம் அழித்துவிடும் சிலவேளைகளில் சிலபேருக்கு.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி