Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

கனவுகளா இவை


வீடுதான் எனக்கு எல்லாமே, வெறும் கற்சுவர்களை கொண்டதல்ல எனது வீடு

எனது வீட்டில் பூக்கள் பூப்பதில்லை உயிர்த்திருப்பதுண்டு,நான் வீடு திரும்பும் போது ஆவலாய் எனக்காக காத்திருக்கும் .அவைகளுக்கு எனை கடிந்து கொள்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை,இன்முகத்துடன் தோள் தழுவி எனை வரவேற்கும்.

காலை எழும்பி உணர்விறுக்கும் குளிரில் வேலை சென்றவன் வீடு திரும்ப ஒரு நிமிடமும் நான் சுணங்கியதில்லை,என் பூக்கள் ஆசைஆசையாய் எனக்காக காத்திருக்கும். அவை என்னை ஒரு பொழுதும் கடிந்துகொள்வதில்லை.

வாழ்வு தந்த அவலத்தில் உடைந்து போன தருணத்தில் நீரூற்ற இயலாமற் போனபொழுது,என் உயிர் பிடித்து உலுப்பி எட்டி உதைத்ததில்லை.அவைக்கு தெரியும் நீரில்லா நேரத்தில் தணலிட்ட புழுவாய் துடித்து வெடிக்கும் என் மனம் பற்றி.கண் வெட்டி நீர் கொட்டும் என் பாசம் அவைகளுக்கு என்றுமே ஆத்மாவில் பதிந்தவை.

அன்பான துணையாய்,அழகான குழந்தைகளாய் என் பூக்கள் வீடிருக்கும் போது வேலை முடியும் நிமிடங்கள் யுகங்களாய் நீளும் எனக்கு.

என் வீடு வெறும் கற்சுவர்களை கொண்டதல்ல.
வீடு திரும்பிகொண்டிருந்தவன், மாலை நேர வாகன நெரிசலில் மாட்டி உடல் உலையும் போதும் என் மனம் பயந்ததில்லை,என் வீட்டில் இருப்பவை பூக்கள் அல்லவா ஏன் தாமதமாய் வந்தாய் என்று அவை எனை வையா.அந்த பூக்களை தாங்கும் தண்டாய்,பொத்தி பாதுகாக்கும் இலைகளாய். எனது வீடு எனக்கு ரொம்பபிடிக்கும்

வீடு என்பது விடுதலையான இடம்,பயமே இல்லாத இடம்.
அங்குள்ள எவருக்கும் எதுபற்றியும் எவர்பற்றியும் அச்சம்வரலாகாது.
எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது தனிமை கலவரம் வரக்கூடாது.

ஏன் வாழ்கின்றோம்
என்று குமையகூடாது.
நீ வீட்டை பயமுறுத்தி வைக்காதே,வீடு உன்னை பயமுறுத்த்கூடாது.
வீட்டை நேசித்து , அன்பை  அன்பால் ஏற்படும் நிம்மதியை நிறைவை தரமுடியாதவன் தரமுடியாதவள் வேறு எங்கு என்ன செய்யினும்,எந்த வெற்றிபெறினும் எப்படி முன்னேறினும் அது வீண்.

@கிறுக்கியது 90களில்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Information

This entry was posted on March 15, 2011 by in கிறுக்கல்கள் and tagged , .
March 2011
M T W T F S S
« Nov   Apr »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

யாழ்ப்பாணம்

சினிமா

Thamilmahan

தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி

%d bloggers like this: