பாழுங்கல்லறைகளில், விடிவே இல்லாத வானத்தின் சூரியர்களாக பொதுவுடமைவாதிகளாய் வாழ்ந்துகொண்டிருக்கும் எமை மானிடமே மறவாதிரு.
கேள்விப்பட்டோம் மாவீரர்நாள் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று செய்யபோகின்றீர்களாமே!!
நன்று, நன்று.இப்படிகூட நடக்காவிட்டால் நாம் எவ்வாறு எமை மனிதர்கள் என்று அழைத்துகொள்வது,இல்லையா சகோதரர்களே.
வெடி ஏந்தி உடல் சிதறி உயிர் பிரிந்த பொழுது,எம்முன்னால் சாதி தெரியவில்லை மதம் தெரியவில்லை ஊர் தெரியவில்லை பணம் பொருள் பதவி எதுவும் தெரியவில்லை.சித்தம் எல்லாம் நீர் தான் நின்றீர்.எம் மக்கள்,எம் மக்கள், எம் மக்கள்.இன்று எமையும் பிரித்துவைத்து கொண்டாட நிக்கின்றீர்.
நன்று, நன்று.
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி