உன்னிடம் வரக்காத்திருக்கும் குழந்தைகள் நாம் தாயே,உன் மடிதொடகாத்து காத்து காய்கிறோம்.இரத்தம் சொட்ட சொட்ட உன்னை பிரிந்து ஓடினோம்,திரும்பி பார்த்து கதறுகிறோம் .உன்னை குத்தி குதறும் பதர்களிடையே உன்னை விட்டு வந்தோம்,தாயே உன் குழந்தைகளுக்கு நீ அன்பைதான் போதித்தாய் ..கத்தி தூக்க கற்று தரவில்லையே. இன்று காந்திதேசத்திடம் கருணைக்குகாக கதறுகிறோம் கிடைக்கும் ஒவ்வோரு கணத்திலும் உன்னை காக்க…..கழுத்தில் கைவைத்த காந்தி தேசத்திடமே கருணைக்காக கதறுகிறோம்.
அடுத்த வாரம் வரும்போது எம்மக்கள் எல்லோரும் கொல்லப்பட்டிருப்பார்கள்.அதை நிறுத்தபாரும்.ஒரு உயிரையாவது காப்பாற்றும்.சகோதரி உன் கதறல் வீண் அம்மா.அடுத்த வாரம் நான் உங்களிடம் வரும் போது யாரும் என்தேசத்தில் யாரும் உயிருடன் இருக்கார்.
தமிழகத்து சோதரமே என்ன செய்ய போகிறாய்.என் சகோதரியின் கதறல் உன் காதில் விழவில்லையா!!! என் எதிரியை நான் துவசம் செய்ய என்னால் முடியும் ,டெல்லியை நீ என்ன செய்ய போகிறாய்
நீ செய்ய நினைக்கும் போது எம்மக்கள் மீதியாய் யாரும் இருக்கார்.இன்றே செய்வாய!
உனக்கு வெறுமனே இது ஒரு performance ஆக படுகிறது,நல்ல coreography ,உன்னை நான் என்னென்று சொல்லவைய்யா!என் மக்களின் சாவும் ,இரத்ததின் சிகப்பும் உனக்கு coreography.
சகோதரி வீண் ,தமிழனாய் பிறந்தும் வாள் தூக்க தயங்கும் இப்பதரிடை நீ கதறுவது வீண் அம்மா..
தமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி